மகரம், கும்பம், மீன ராசிக்கு அதிர்ஷ்ட வாரம்... பணம், பதவி, முன்னேற்றம் காத்திருக்கிறது!


  • Weekly Rasi Palan: ஜூன் 16 முதல் 21 ஆம் தேதி (ஆனி 2 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகரம், கும்பம், மீன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மகரம், கும்பம், மீன ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 16 முதல் 21 ஆம் தேதி (ஆனி 2 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மகரம் ராசி பலன்

    மகர ராசியினருக்கு இந்த வாரம் யோகமான காலமாக அமையும். வீடு, நிலம், வாகனம் வாங்குதல், சொத்து சேர்த்தல் போன்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய பொறுப்புகள் மற்றும் தொழில் முன்னேற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    Advertisement

    பணவரவு திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விஜயலட்சுமி தேவி வழிபாடு மேலும் நல்ல பலன்களைத் தரும். சந்தோஷமும் பொருளாதாரமும் 80% வரை சாதகமாக இருக்கும்.

    கும்பம் ராசி பலன்

    கும்ப ராசியினருக்கு இந்த வாரம் தொழில், உத்தியோகம், வியாபாரம் மற்றும் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த தடைகள் நீங்கி, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும்.

    பிள்ளைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற பேச்சு மற்றும் சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலம் மற்றும் துணையின் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். சிவன் வழிபாடு சிறந்த பலன்களை அளிக்கும். சந்தோஷமும் பொருளாதாரமும் 75% வரை நன்றாக இருக்கும்.

    Advertisement

    மீனம் ராசி பலன்

    மீன ராசியினருக்கு இந்த வாரம் யோக பலன்கள் அதிகரிக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் மற்றும் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் மற்றும் மாற்றங்கள் சாதகமாக அமையும். மணவாழ்க்கை மற்றும் காதல் விஷயங்களிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

    பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குழந்தை பாக்கியம் மற்றும் மனமகிழ்ச்சி தரும் பயணங்கள் அமையக்கூடும். குலதெய்வ வழிபாடு சிறந்த பலன்களைத் தரும். சந்தோஷமும் பொருளாதாரமும் 80% வரை சாதகமாக இருக்கும்.

    English Summary

    Weekly Rasi Palan for Magaram, kumbam, meenam: In this astrological article, we will examine in detail the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for individuals born under the sign of Magaram, kumbam, meenam during the week spanning from June 15 to June 21.