7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்?


  • Weekly Rasi Palan: ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு இந்த வாரம் தொழில், உத்தியோகம், வியாபாரம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பிரச்சனைகள் மற்றும் கடன்கள் தீரும். வீடு கட்டுதல், வீடு மாற்றுதல் போன்ற முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணவரவும் நன்றாக இருக்கும்.

    Advertisement

    இருப்பினும் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கவும். ஐயப்பன் வழிபாடும், ஏழைகளுக்கு உணவு தானம் செய்வதும் நன்மைகளை அதிகரிக்கும்.

    விருச்சிகம் ராசி பலன்

    விருச்சிக ராசியினருக்கு இந்த வாரம் பணவரவு சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகள், கடன் உதவிகள் மற்றும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்கள் படிப்படியாக தீரும்.

    கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும் என்பதால் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். வாகனப் பயணங்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் பேசும் போது கவனம் அவசியம். பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் முருகன் வழிபாடு நல்ல பலன்களைத் தரும். சந்தோஷமும் பொருளாதாரமும் 70% வரை சாதகமாக இருக்கும்.

    Advertisement

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசியினருக்கு இந்த வாரம் தொழில், உத்தியோகம், வியாபாரம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம், வீடு மாற்றம், வீட்டு மேம்பாடு போன்ற முயற்சிகளுக்கு ஏற்ற காலமாகும். பணவரவும் சிறப்பாக இருக்கும்.

    கணவன்-மனைவி இடையே ஒற்றுமையை பேணுவது அவசியம். வயிறு, சர்க்கரை மற்றும் கால்கள் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளில் கவனம் தேவை. கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. திருச்செந்தூர் முருகன் வழிபாடு சிறந்த பலன்களைத் தரும். சந்தோஷம் 80% மற்றும் பொருளாதாரம் 90% வரை சாதகமாக இருக்கும்.

    English Summary

    Weekly Rasi Palan for Thulam, Viruchigam, Dhanusu: In this astrological article, we will examine in detail the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for individuals born under the sign of Thulam, Viruchigam, Dhanusu during the week spanning from June 15 to June 21.