குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம்


  • Weekly Rasi Palan: ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

    அந்த வகையில், ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசி, லக்கினம் சார்ந்தவர்களுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மன வலிமை அதிகரிக்கும். வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நிவர்த்தியாகும். படபடப்பு, டென்ஷன், நிரந்தரமான வேலை இருக்குமா என்கிற விஷயங்கள் எல்லாம் தீரும். 4, 5, 6 ஆம் தேதிகளில் பண வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். சுப விரயங்களை செய்து மகிழ்வீர்கள்.

    குரு பார்வை

    உங்களை நம்பி வருபவர்களுக்கு உதவி செய்யக்கூடிய சூழல் ஏற்படும். பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய அற்புதமான காலகட்டம். பொறுப்புகள் அதிகமாக இருக்கும். மூத்தவர்களை உங்கள் விஷயங்களில் தள்ளிவைப்பது நல்லது. 4 ஆம் இடத்தில், கேந்திரத்தில் சனி இருப்பதால் காசி, கயா, ராமேஸ்வரம் சென்று வருவது மேன்மை தரும். குரு பார்வையில் வந்திருப்பதால் சேத்திரங்களுக்கு சென்று வருவது நல்லது.

    Advertisement

    தொழில்

    தாயாரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பண வரவு நன்றாக இருக்கும். யோகம், அனுகூலம், சந்தோஷம், ஏற்றம், பணவரவு ஏற்படும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். துணையுடன் எல்லா பகுதிகளுக்கும் சென்று வருவீர்கள்.

    செல்வாக்கு

    இழுபறியாக இருந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். சிவனை வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும். வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். செல்வாக்குகள் கூடும். தொழில் ரீதியாக அனுகூலங்கள் காணப்படும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடைபெறும்.

    Advertisement

    வழிபாடு

    சினிமா, மீடியா, கலைத் துறையினர் பெரும் பெயர்களைப் பெறுவீர்கள். உறவுகளுக்குள் இருந்த பிரச்சனைகள், பாதிப்புகள் நிவர்த்தியாகும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சிகளை செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. செவ்வாய்க்கிழமை மதிய வேளை உணவு தானமளிப்பது அருமையான அமைப்பாகும்.

    English Summary

    Weekly Rasi Palan for Dhanusu (தனுசு ராசி பலன்): In this astrological article, we will examine in detail the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for individuals born under the sign of Dhanusu (Sagittarius) during the week spanning from June 1st to June 7th.