Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க


  • Weekly Rasi Palan: ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசியினருக்கு அற்புதமான ஏற்றங்கள் காணப்படும். துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மையைத் தரும். எதையும் யோசித்துக் கொண்டு துணையிடம் வருத்தப்படுவது, கத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாமல் வீட்டுக்குள் சட்டம் போட்டுக் கொண்டிருப்பதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் சொல்வதை உங்கள் துணை கேட்பார்கள்.

    Advertisement

    குரு பார்வை

    குரு பார்வை 2 ஆம் இடத்திற்கும், 12 ஆம் இடத்திற்கும், 4 ஆம் இடத்திற்கும் உள்ளதால் அடுத்த ஒரு வருடத்துக்குள் உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் செய்து கொள்ளுவது நன்மை பயக்கும். வீட்டில் இன்டீரியர் டெக்கரேட் செய்வது, அத்தியாவாசியப் பொருள்களை மாற்றுவது, புதிய வாகன மாற்றம், வீடு மாற்றம், தனிக்குடித்தனம் செல்வது போன்றவற்றிற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

    முன்னேற்றம்

    குடும்பத்தில் அந்நியோன்யமாக இருப்பது ஏற்றத்தைத் தரும். யாரிடமும் தேவையில்லாமல் கோபப்படுவது, கத்துவதை தவிர்ப்பது நல்லது. சுற்றுலா செல்வது, வெளியிடங்களுக்குச் செல்வது நன்மை பயக்கும். கடந்த காலங்களை் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. இனிவரும் காலங்களை உங்களுக்கான காலங்களாக மாற்றிக் கொள்வது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் ஏற்படும்.

    Advertisement

    சுபவிரயம்

    சுபவிரயங்கள் ஏற்படும். தொழில், பணவரவு அற்புதமாக இருக்கும் நல்ல காலகட்டம். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. வயிறு சார்ந்த பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அஷ்டமத்தில் குரு சுக்கிரன் இருப்பதால் சர்க்கரை, நீரழிவு நோய் தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. காலில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நல்ல உத்தியோகம் கிடைக்கும்.

    வழிபாடு

    7 ஆம் இடத்தில் சூரியன் புதன் அமர்ந்திருப்பதால் நல்ல வேலை கிடைக்கும். அரசு சார்ந்த தொடர்புகள் கிடைக்கும். எல்லா விஷயங்களும் உங்களுக்கு பாசிட்டிவாக இருக்கும் பகை இல்லாமல் இருப்பது அவசியம். கணவன், மனைவிக்குள் சண்டை இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. துணையின் கண், பல், கால், வயிறு பாதிப்புகளில் கவனம் தேவை.

    Advertisement

    கடன் கொடுக்காமல் இருப்பது ஏற்றத்தைத் தரும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும். திருச்செந்தூர் முருகன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Weekly Rasi Palan for Dhanusu (தனுசு ராசி பலன்): In this astrological article, we will examine in detail the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for individuals born under the sign of Dhanusu (Sagittarius) during the week spanning from June 15 to June 21.