Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது


  • Weekly Rasi Palan: ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கடகம் ராசி பலன்

    கடக ராசியினருக்கு தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். மனக்கவலைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உடனிருப்பவர்கள் செய்யக்கூடிய பிரச்சனைகளால் நிம்மதி இழக்கக்கூடிய சூழல் வருவதற்கான வாய்ப்புள்ளது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகள் விஷயங்களில் அனுகூலத்தைத் தரும்.

    Advertisement

    முன்னேற்றம்

    பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். துணை விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களால் ஆதாயம் ஏற்படும் பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். புதன்கிழமை தோறும் மதிய வேளைகளில் உணவு தானமாக அளிப்பது விரயங்களை சுப விரயங்களாக மாறும்.

    லாபத்தில் செவ்வாய்

    லாப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் நண்பர்களை தூரமாக வைத்துக் கொள்வது நன்மையைத் தரும். மூத்த அண்ணனுக்கு தேவையில்லாத ஆரோக்கிய குறைபாடு, சண்டைகள், விபத்துகள், கால் முட்டிகளில் பாதிப்பு வருவது போன்றவை வரும் வாய்ப்புள்ளது. புதிய கடை ஆரம்பிப்பது, புதிய விஷயங்களை தொடங்குவது, வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவது போன்ற யோகங்கள் உண்டாகும். பெரிய அளவில் வெற்றி பெறக்கூடிய காலகட்டம்.

    Advertisement

    கவனம்

    நிறைய சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். தெய்வ அனுக்கிரகம் முழுமையாக கிடைக்கும். எல்லா விஷயங்களையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். பணத்தை மற்றவர்களிடம் கொடுத்து ஏமாறுவதைத் தவிர்ப்பது நல்லது. பொருளாதாரத்தில் முன்னேற்றம், புதிய வரவு, திருமண யோகம், நகைகள் வாங்கும் யோகம் உண்டு.

    வழிபாடு

    இடது கண் சார்ந்த பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. செல்வாக்கு உயரக்கூடிய அற்புதமான காலகட்டம். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் வெற்றிகள் ஏற்படும். நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். காது, மூக்கு, தொண்டை, அலர்ஜி, வெர்டிகோ தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷம் 70 சதவீதம், பொருளாதாரம் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Weekly Rasi Palan for Kadagam (கடகம் ராசி பலன்): In this astrological article, we will examine in detail the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for individuals born under the sign of Kadagam (Cancer) during the week spanning from June 15 to June 21.