Weekly Rasi Palan: ஜூன் 22 முதல் 28 ஆம் தேதி (ஆனி 8 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 22 முதல் 28 ஆம் தேதி (ஆனி 8 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். கடக ராசியினர் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உடனிருப்பவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையைத் தரும். அரசாங்கம், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் கணக்குவழக்குகள், ஆவணங்கள் விஷயங்களை சரியாக பார்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். காதல் கைகூடும் அமைப்பு உள்ளது. பணம், பொருள்கள் மீது புதிய ஆர்வம் உண்டாகும். காதல் திருமணம், திருமண யோகம் உண்டாகும். வெளிநாடு செல்லும் அவசியம் ஏற்படும். பெரிய கடனை முடிக்கும் அமைப்பு உள்ளது. மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். உத்தியோகம், தொழில், படிப்பு, வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. யாரையும் எளிதாக நம்பிவிடுவது சிக்கலை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ள பாதிப்புகள் சரியாகும். பிள்ளைகள், துணை, உறவினர்கள் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வளர்ப்புப் பிராணிகள் வளர்க்கும் யோகம் உண்டு. புதன்கிழமை தோறும் மதிய வேளைகளில் உணவு தானமளிப்பது விரயத்தை தடுக்கும். விலையுயர்ந்த பொருள்களை வங்கியில் பாதுகாப்பாக வைப்பது நன்மை. முன்னேற்றமும், வளர்ச்சியும் நிறைந்த காலகட்டமாக இருக்கும். யாரிடம் பேசினாலும் கனிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது நன்மையைத் தரும். மகான்கள் வழிபாடு, நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு, லட்சுமி நாராயணர் வழிபாடு சகலவித நன்மையைத் தரும். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 90 சதவீதம் நன்மைகளைத் தரக்கூடிய அற்புதமான வாரமாக உங்களுக்கு அமையும்.கடகம் ராசி பலன்
திருமண யோகம்
கவனம்
முன்னேற்றம்
வழிபாடு