கடக ராசிக்கு வீடு, நிலம் வாங்கும் யோகம்... இந்த வாரம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்!


  • Weekly Rasi Palan: ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்திற்கு பிரவேசமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கடகம் ராசி பலன்

    கடக ராசியினருக்கு உறவு முறையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தேவையில்லாத பதட்டம் குறையும். விரயங்கள் அதிகமாக இருப்பதால் விலை உயர்ந்த பொருட்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். துணை விஷயத்தில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்திற்கு தேவையான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

    Advertisement

    கவனம்

    சுபிக்ஷமும், ஆனந்தமும் ஏற்படும். ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத சங்கடங்கள் பெரியளவில் கஷ்டத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை. நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். ஏற்றமும், அனுகூலமும் காணப்படும். உறவுமுறையில் சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

    வீடு வாங்கும் யோகம்

    குரு, சுக்கிரன் சேர்க்கை உண்டாவதால் வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, வண்டி வாகனம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். சிலரின் வீட்டில் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற யோகம் உண்டு. பிடித்த வரன்கள் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் கால் முட்டியில் அடிபடுவது, விட்டமின் குறைபாடு ஏற்படுவதால் கோபம், டென்ஷன் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

    Advertisement

    யோக பலன்கள்

    பெரிய எதிர்மறையான விஷயங்கள் எதுவும் நடைபெறாது. தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கேது இருப்பதால் குடும்ப விஷயங்கள், தனிப்பட்ட விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நன்மையைத் தரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர், அரசியல்வாதிகளுக்கு நிறைய சாதகமான விஷயங்கள் நடைபெறும்.

    வழிபாடு

    சிவன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். நம்பிக்கை அதிகரிக்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் என எந்தவித மாற்றங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது ஏற்றத்தைத் தரும். சந்தோஷம் 70 சதவீதம், பொருளாதார ஏற்றம் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Weekly Rasi Palan for Kadagam (கடகம் ராசி பலன்): Let us look at the favorable outcomes in store for those born under the Cancer (Kadagam) sign during this week, from June 29 to July 5.