சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம்


  • Weekly Rasi Palan: ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

    அந்த வகையில், ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    கன்னி ராசி பலன்

    கன்னி ராசியினருக்கு யோக பலத்தை அதிகளவில் பெறும் காலகட்டம். பெற்றோர், பெரியோர் விஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் அந்நியோன்யம் பெருகும். பயணங்கள் சமயத்தில் புதிய அறிமுகத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உறவினர்கள் விஷயத்தில் குறிப்பாக தந்தை வழி உறவுகளில் நிறைய சிக்கல்கல் காணப்படும் என்பதால் கவனம் தேவை. விட்டுக கொடுத்துச் செல்வது நல்லது.

    நல்ல செய்தி

    தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பில் இருந்து வந்த சிறு சிறு தடங்கலான அமைப்புகள் எல்லாம் மாறும். எல்லா விஷயங்களையும் சமாளித்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கை ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

    Advertisement

    தொழில்

    தொலைதூரத்தில் இருந்து நன்மைகள் கிடைக்கும் காலகட்டம். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு ரீதியாக நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். பெரும் சந்தோஷம் ஏற்படும் காலகட்டம். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். 10 ஆம் இடத்தில் புதன் சுக்கிரன் இருப்பதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

    வண்டி வாகன யோகம்

    முனைவர் பட்டம் வாங்கும் அமைப்பு உள்ளது. பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரக்கூடிய அமைப்பு உள்ளது. உங்களுடைய நண்பர்கள் உங்களுக்கு நிறைய வகையில் உதவுவார்கள். எல்லா விதமான நல்ல விஷயங்களும் நடக்கும் காலகட்டம். இரவு நேர பயணங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனங்களில் பழுது நீக்குவீர்கள். கணவருக்கு வேலை நிமித்தமான பயணங்கள் ஏற்படும்.

    Advertisement

    வழிபாடு

    லாபத்தில் குரு இருப்பதால் பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். பெரிய பணங்கள் உங்களைத் தேடி வரும். வாய்ப்புகள் கிடைக்கும். அலர்ஜி, ஒவ்வாமை, சளி தொந்தரவுகளில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தி வழிபாடு, பெருமாள் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும்.

    English Summary

    Weekly Rasi Palan for Kanni (கன்னி ராசி பலன்): In this astrological article, we will examine in detail the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for individuals born under the sign of Kanni (Virgo) during the week spanning from June 1st to June 7th.