Weekly Rasi Palan: ஜூன் 8 முதல் 14 ஆம் தேதி (வைகாசி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் கன்னி வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த வகையில், ஜூன் 8 முதல் 14 ஆம் தேதி (வைகாசி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். கன்னி ராசியினருக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தேவையில்லாமல் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நிவர்த்தியாகும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் அடுத்தடுத்து முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு கூடும். முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து விட்டு முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் மிகுந்த கவனம் தேவை. கோபப்படுவது, ரோஷப்படுவதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். புதிய உத்தியோகம் வந்தால் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கெளரவமும், மதிப்பு, மரியாதையையும் அதிகரிக்கும். சளி, அலர்ஜி தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவு தானமளிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். லாபம் நன்றாக இருப்பதால் பணம் கொட்டக்கூடிய யோகம் உண்டாகும். நிறைய பொறுப்புகள் கிடைக்கும். நண்பர்களின் சகவாசம் நன்றாக இருக்கும். மூத்தவர்களிடம் அந்நியோன்யம் அதிகரிக்கும். மூத்தவர்களின் அனுமதி கிடைக்கும். பொருளாதாரம் மட்டுமல்லாமல் எல்லா விஷயங்களிலுமே பெரிய அளவில் திருப்தி ஏற்படும். யாருமே எதிர்பார்க்க முடியாத விஷயங்களை எல்லாம் உங்களால் சாதிக்க முடியும் என்று மற்றவர்கள் உணரக்கூடிய காலகட்டம். அஷ்டமத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் சில இடங்களில் மிரட்டி காரியத்தை சாதிப்பீர்கள். பாக்கியத்தில் சூரியன் அமர்ந்திருப்பதால் எல்லா முயற்சிகளையும் ஒருமுறைக்கு இருமுறை போட வேண்டியதிருக்கும். அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி ஏற்படும். சந்தோஷம் ரீதியாக 90 சதவீத நன்மைகள் உண்டாகும். ஸ்ரீமன் நாராயணன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.கன்னி ராசி பலன்
முதலீடுகள்
ஆரோக்கியம்
திருப்தி ஏற்படும்
வழிபாடு