Weekly Rasi Palan: ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். கும்ப ராசியினருக்கு பிள்ளைகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரம், வண்டி வாகனங்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வருத்தங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தொடர்ச்சியாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். எதிர்பார்க்காத நன்மைகள் நடக்கும். தொழில் ரீதியாக இருந்த சங்கடங்கள் தீரும். ஏற்றங்கள் அதிகரிக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களும் நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் மற்றும், துணையின் ஆரோக்கியத்தை அடுத்த ஆண்டு வரை மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மருந்து, மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்வது நல்லது. யாரிடம் பேசினாலும், பழகினாலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு உதவி செய்பவர்களும் சேர்ந்து சிக்கலில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். பலம் அதிகரிக்கும். எல்லா விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தேவையில்லாதவற்றை பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. தைரியமாக எல்லா காரியங்களையும் செய்யலாம். மனப்பூர்வமான சந்தோஷம் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பெரிய ஆனந்தத்தைப் பெறும் காலம். எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்துள்ளதால் மருத்துவராவதற்கான சீட் கிடைக்கும். அரசு வேலைகள் கிடைக்கும். அப்பாவுடைய சொத்துகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். அம்மாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. வீட்டில் எலக்ட்ரிக்கல் பொருள்களில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. எதிர்பாலினத்தவரிடம், துணையிடம் பகையை வளர்க்காமல் செல்வது நல்லது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும். சிவன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.கும்பம் ராசி பலன்
முன்னேற்றம்
கவனம்
முயற்சிகளில் வெற்றி
வழிபாடு