Weekly Rasi Palan: ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். கும்ப ராசிக்கு மூன்றாம் வீட்டில் சனி பகவான் சாதகமாக இருப்பதால், நீண்ட நாட்களாக இருந்து வந்த குடும்பப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி நிம்மதி அதிகரிக்கும். வருமானம் சீராக இருப்பதால் அன்றாட செலவுகளை எளிதாக சமாளித்து, புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் குறைந்து, மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். தொழிலில் நிலவி வந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவையை சரியாகப் புரிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் மற்றும் தொழில் விரிவாக்கம் குறித்து முடிவெடுக்க ஏற்ற காலமாக இருக்கும். இல்லத்தரசிகள் சேமிப்பில் கவனம் செலுத்தி எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுப்பீர்கள். மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மூட்டு மற்றும் கால் வலி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் எள் கலந்த சாதத்தை காக்கைகளுக்கு வழங்குவது சனி பகவானின் அருளைப் பெற உதவும். இந்த பரிகாரத்தைச் செய்வதன் மூலம் மன அமைதி, தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்பத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.கும்பம் ராசி பலன்
தொழில்
கல்வி
ஆரோக்கியம்