Weekly Rasi Palan: ஜூன் 23 முதல் 28 ஆம் தேதி (ஆனி 9 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், மகரம், மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 23 முதல் 28 ஆம் தேதி (ஆனி 9 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். மகர ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கம். நிறைய சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். தொழிலில் மேன்மை ஏற்படும். புதிய உத்தியோகம் கிடைக்கும். வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். அதிகளவிலான ஏற்றம் உண்டாகும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொழில் ஏற்றம், உத்தியோக ஏற்றம், வியாபார ஏற்றம், படிப்பில் ஏற்றம் என முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். அரசியலில் பெரிய பொறுப்புகளுக்கு வருவீர்கள். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். தொழில் ரீதியாக அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். எல்லா விஷயங்களும் சாதகமாக நடக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். குரு புதன் சுக்கிரன் அருமையாக இருப்பதால் ஜெயம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். எதிர்பார்ப்பதை விட நிறைய பேர் உங்களுடன் நட்பாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். மனைவியின் ஆரோக்கியம், மார்பகம், கர்ப்பப்பை சம்பந்தப்பட் பிரச்சனைகள், கணவரின் அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. அம்மாவின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நல்லது. தொடர்ந்து இருந்து வந்த மனம், பணம் சார்ந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். சிக்கல்கள் தீரும். பொருளாதாரத்திற்கும், சந்தோஷத்திற்கும் குறைவிருக்காது. மகிழ்ச்சி நிறைந்த காலகட்டமாக இருக்கும். சிவனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். நவக்கிரகத்தில் இருக்கும் ராகு கேது வழிபாடு ஏற்றத்தைத் தரும். கோளார் பதிகத்தை தினந்தோறும் கேட்பது நன்மை பயக்கும். வாராஹி, பிரித்யுங்கரா, சூளினி வழிபாடு நல்லது.மகர ராசி பலன்
முன்னேற்றம்
ஜெயம் உண்டாகும்
யோக பலன்கள்
வழிபாடு