குருவின் பார்வை பலம்.. மகர ராசிக்கு 4 விஷயங்களில் வரும் அதிர்ஷ்டம்.. பேச்சில் மட்டும் கவனம்


  • Weekly Rasi Palan: ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மகரம் ராசி பலன்

    மகர ராசியினர் பழைய கடன்களை அடைத்து முடிக்கும் அமைப்பு உள்ளது. வழக்குகளில் வெற்றிகள் ஏற்படும். எதிரிகளை வெற்றி பெறும் யோகம் உண்டாகும். ராஜ்ய காரியங்களில் வெற்றிகள் ஏற்படும். அரசாங்க உத்தரவுகளுக்கு அனுகூலம் ஏற்படும். அரசு வேலைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றம் ஏற்படும். தடைபட்டிருந்த படிப்பு, உத்தியோகம், வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

    Advertisement

    கவனம்

    குடும்பத்தில் துணை விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செல்வது, உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம். வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நன்மை பயக்கும். யாரிடம் பேசினாலும் இணக்கமாகச் செல்வது நல்லது. இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும்.

    முன்னேற்றம்

    மிகப்பெரிய ஏற்றங்கள், நம்பிக்கை ஏற்படும். புதிய விஷயங்களை ஆரம்பிப்பீர்கள். வாழ்க்கைத் துணைக்கு தலை பாகத்தில், கண், மூக்கு, காது, நரம்பு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் பெயரில் ஆரம்பிக்கும் விஷயங்கள் தள்ளிப்போய் நடப்பதற்கான அமைப்புள்ளது. இந்த காலத்தில் போடக்கூடிய முதலீடுகள் சிறிது பிரச்சனையாக இருக்கும்.

    Advertisement

    குரு பார்வை

    குருவின் முழு பார்வை பலம் இருப்பதால் தெய்வ அனுக்கிரகம் நன்றாக இருக்கும். குரு சுக்கிரன் சேர்ந்து அசாத்திய பலத்தைக் கொடுப்பதால் அசாத்தியமான சக்தி ஏற்படும். எல்லா விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். அஷ்டமத்தில் கேது இருப்பதால் மன அழுத்தம், மன வலிமை குறைவு ஏற்படும். அதற்காக பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. ஆரோக்கியத்தில் இருக்கும் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக சரியாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

    வழிபாடு

    யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய அமைப்பு ஏற்படும். அஷ்டமத்தில் கேது இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நிறைய நன்மைகள் ஏற்படும். சுபகாரியத் தடைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். அடுத்தடுத்து எல்லா காரியங்களிலும் ஏற்றம் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். கோளார் பதிகம் சொல்வது, விநாயகரை வழிபடுவது அற்புதத்தை ஏற்படுத்தும்.

    English Summary

    Weekly Rasi Palan for Magaram (மகரம் ராசி பலன்): Let us look at the favorable outcomes in store for those born under the Capricorn sign during this week, from June 29 to July 5.