குருவின் அருளால் மீன ராசிக்கு யோக காலம்.. எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும்!


  • Weekly Rasi Palan: ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மீனம் ராசி பலன்

    மீன ராசியினருக்கு இரண்டாம் வீட்டில் குரு பகவான் சுபபலன் அளிப்பதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பண நெருக்கடிகள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகி, உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவுகள் வலுப்பெறும்.

    Advertisement

    தொழில்

    உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நிலுவையில் இருந்த பணிகளை எளிதாக முடித்து விடுவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் அல்லது பதவி தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வருமானம் உயரும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகளும் சாதகமாக அமையும்.

    குடும்ப வாழ்க்கை

    இல்லத்தரசிகள் குடும்ப பொறுப்புகளை சிறப்பாக கையாள்ந்து பாராட்டைப் பெறுவீர்கள். மாணவர்கள் கவனச்சிதறலைத் தவிர்த்து முழு ஈடுபாட்டுடன் படித்தால் போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெற முடியும். திட்டமிட்ட முயற்சியே முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

    ஆரோக்கியம்

    தூக்கமின்மை போன்ற உடல்நலப் பிரச்சனைகள் படிப்படியாக சரியாகும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் முளைகட்டிய பச்சைப்பயறை விநாயகருக்கு நிவேதனம் செய்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். இந்த பரிகாரம் மன அமைதி, காரிய வெற்றி, கல்வி மற்றும் தொழிலில் முன்னேற்றத்தை அளிக்கும்.

    English Summary

    Weekly Rasi Palan for Meenam (மீனம் ராசி பலன்): Let us look at the favorable outcomes in store for those born under the Pisces sign during this week, from June 29 to July 5.