கோடீஸ்வர யோகம் பெறும் மேஷ ராசி.. புது வீடு, புது நிலம், புது வாகனம்.. செட்டிலாக போறீங்க


  • Weekly Rasi Palan: ஜூன் 22 முதல் 28 ஆம் தேதி (ஆனி 8 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 22 முதல் 28 ஆம் தேதி (ஆனி 8 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மேஷம் ராசி பலன்

    மேஷ ராசியினர் தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகளில் வெற்றி ஏற்படும். உங்கள் மனதிற்குப் பிடித்தவர்களுக்காக விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். பொறுமையாக திட்டமிட்டு செயல்படும் காரியங்களில் நல்ல ஏற்றத்தை ஏற்படுத்தும். தனிப்பட்ட செல்வாக்கு உண்டாகும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நன்மைகள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த பாதிப்புகளில் இருந்து பரிபூரண நிவர்த்தியாகும்.

    Advertisement

    சொத்து வாங்கும் யோகம்

    வீடு, நில புலன்கள், சொத்துகள் வாங்கக்கூடிய பாக்கியம் உண்டாகும். வீடு சுபிக்ஷமாக இருக்கும். சொந்த பந்தங்கள் வந்து செல்லும் பாக்கியம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. புது வீடு, புது வண்டி, புது நிலம் வாங்கும் யோகம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கக்கூடிய யோகம் உண்டாகும்.

    தொழில்

    வீட்டில் பீரோ, சோஃபா போன்ற பொருள்களை வாங்குவீர்கள். தொழில், உத்தியோகத்தில் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். புதிய தொழில் அமைப்பு உண்டாகும். கூட்டாளிகள் விஷயத்தில் நன்மை ஏற்படும். கெளரவமும், அனுகூலமும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    Advertisement

    வழிபாடு

    ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. எந்த விஷயங்களுக்காகவும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. குறிப்பாக, அரசு சார்ந்த விஷயங்களில் நன்மைகள் ஏற்படும். குருவாயூர் கிருஷ்ணர், துர்க்கை வழிபாடு சகலவித அனுகூலத்தையும் ஏற்படுத்தும். சந்தோஷம், பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதம் நன்மைகள் உண்டாகும் காலகட்டம்.

    English Summary

    Weekly Rasi Palan for Mesham (மேஷம் ராசி பலன்): Let us look at the favorable outcomes in store for those born under the Aries sign during this week, from June 22 to 28 (Aani 8 to 14).