Weekly Rasi Palan: ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். மேஷ ராசியினர் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். பொறுமையைக் கடைப்பிடித்து செயல்படுவீர்கள். நிறைய புதிய விஷயங்களை ஆரம்பிப்பீர்கள். உறவுகள் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காணப்படும். தொழில் விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்கள் படிப்படியாக நிவர்த்தியாகும். வியாபாரத்தில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் தீரும். உத்தியோகத்தில் பெரிய அளவு சாதனையும், சந்தோஷமும் ஏற்படும். முன்னேற்றத்திற்கான அற்புதமான காரணமாக அமையும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தொழில், உத்தியோகம், வியாபாரம் படிப்பு என எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிப்பதற்கான முயற்சிகளில் வெற்றி ஏற்படும். சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து காரியங்களிலும் வெற்றி ஏற்படும். பெரிய மனிதர்களை சந்திக்கும் பாக்கியம் உண்டாகும். அரசியல்வாதிகள், முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள் என நிலைப்பாட்டை எடுத்துள்ள மேஷ ராசியினருக்கு அவை கிடைக்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். உறவுகளுடன் இருந்து வந்த மன தாங்கல்களை தீர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை செய்து மகிழ்வீர்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான விஷயங்களை பார்த்துக் கொள்வது நல்லது.மேஷம் ராசி பலன்
முன்னேற்றம்
வழிபாடு