Weekly Rasi Palan: ஜூன் 8 முதல் 14 ஆம் தேதி (வைகாசி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த வகையில், ஜூன் 8 முதல் 14 ஆம் தேதி (வைகாசி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். மேஷ ராசியினருக்கு உடனிருப்பவர்கள் உங்களை கோபப்படுத்தும் சூழல் உள்ளது. அதனை கண்டுகொள்ளாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யும் வகையில் உங்களுக்கு ஏற்றவாறு செயல்படுவது நன்மையைத் தரும். இழுபறியாக இருந்த நிலைமைகள், சிக்கல்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். புதிய தொழில்கள் கிடைக்கும். கடல் கடந்து தொழில் தொடங்கக்கூடிய யோகம் உண்டாகும். நிறைய பணங்களைத் தயாராகிக் கொள்வது நல்லது. இளைஞர்களுடன் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உள்ளது. புதுப்புது விஷயங்கள், புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தொடர்ந்து இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். சுபிக்ஷம், அனுகூலம், யோகம் உண்டாகும் அற்புதமான காலகட்டம். மனதில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும் நல்ல காலகட்டம். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் சந்தோஷம் ஏற்படும். திடீர் பணவரவு, திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும் அமைப்பு உள்ளது. பெரிய மனிதர்களை சந்திக்கும் யோகம் உண்டு. உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது, தியானம், யோகம் செய்வது போன்ற நல்ல காரியங்களைச் செய்வீர்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். துர்க்கை வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைத் தரும்.மேஷம் ராசி பலன்
சிக்கல் தீரும்
திடீர் பணவரவு
வழிபாடு