Mithunam Rasi Palan: கொடிகட்டி பறக்கப்போகும் மிதுன ராசி.. தொட்டது துலங்கும் யோகம்


  • Weekly Rasi Palan: ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

    அந்த வகையில், ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    மிதுனம் ராசி பலன்

    மிதுன ராசியினருக்கு உறவினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. நெருங்கிய சொந்தங்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். தூக்கமின்மை, மன அழுத்தம் நீங்கும். தொழிலில் அற்புதமான மாற்றம் ஏற்படும். தொழிலில் அற்புதமான ஏற்றம் ஏற்படும். வியாபாரத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

    யோக பலன்

    வாக்குகளை காப்பாற்றக்கூடிய அற்புதமான காலகட்டம். யோக பலன்களை அதிகளவில் பெறக்கூடிய ராசியினர். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாரிடம் பேசினாலும் தன்மையாகப் பேசுவது நல்லது. புதிய தொழில் தொடங்குவது ஏற்றத்தைக் கொடுக்கும். கடன் விஷயத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்மைகள் காணப்படும். தனிப்பட்ட செல்வாக்குகள் கூடக்கூடிய நல்ல காலகட்டம்.

    Advertisement

    ஆரோக்கியம்

    ஏற்றமும், சந்தோஷமும் நிம்மதியை ஏற்படுத்தும். வெற்றிகளைக் குவிக்கக்கூடிய காலகட்டம். குளிர்ச்சியான பொருள்கள், இனிப்புகள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இடுப்பு வலி, கால் பாதம் வலி வருவதற்கான வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் பெரிய மாற்றமும் வேகமும், புதிய தொடர்புகளும் ஏற்படும். பிரபலமாவதற்கான வாய்ப்புள்ளது. எந்தவொரு மன கஷ்டமும் ஏற்படாது. நினைத்த காரியங்கள் நடக்கும் யோகம் உண்டாகும்.

    வழிபாடு

    4,5,6 ஆம் தேதிகளில் சுபச்செலவுகள் ஏற்படும். வண்டி, வாகனங்களை வாங்கும் யோகம் உண்டு. அருகில் உள்ள மாநிலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். நல்ல விஷயங்கள் ஏற்படக்கூடிய அனுகூலமான காலகட்டம். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி ஏற்படும். லட்சுமி நாராயணரை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். சளி தொந்தரவு, விட்டமின் டி, கால்சியம் குறைபாடு, எலும்புகள் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Weekly Rasi Palan for Mithunam (மிதுனம் ராசி பலன்): In this astrological article, we will examine in detail the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for individuals born under the sign of Mithunam (Gemini) during the week spanning from June 1st to June 7th.