Weekly Rasi Palan: ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். மிதுன ராசியினருக்கு ஏ கிளாஸ் யோகம் உண்டாகும். நல்ல மாற்றங்கள் காணப்படும். கால் பாதம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளில், காயங்களில் மிகுந்த கவனம் தேவை. மனைவியாக இருந்தால் கணவனின் ஆரோக்கியத்திலும், கணவராக இருந்தால் மனைவியின் ஆரோக்கியத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பணவரவு அற்புதமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏராளமான நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். என்னவிதமான முயற்சிகளைச் செய்தாலும் அதில் வெற்றி பெறுவதற்கான யோகங்களைப் பெறுவீர்கள். மனதில் சந்தோஷத்திற்கு எந்தவித குறைவுகளும் இருக்காது. மற்றவர்களிடம் உள்ள தவறுகளை எளிதாக கண்டறிவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு ஆர்வம் அதிகரிக்கும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். தங்கங்களை வாங்கும் யோகம் உண்டு. தொழில் ரீதியாக அனுகூலங்கள் காணப்படும். தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள் தீரும். இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். உத்தியோகம், வியாபாரம், தொழிலில், மேலதிகாரிகள் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனம் தேவை. சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோர் பெரியோருடன் மனம் விட்டும் பேசுவது நன்மையைத் தரும். கத்துவது சண்டையிடுவதை தவிர்ப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். நினைத்த காரியங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழில் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் உள்ள பொருள்களை சரிசெய்வீர்கள். சந்தோஷம் ரீதியாக 90 சதவீத நன்மைகளும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீத நன்மைகளும் உண்டாகும் நல்ல காலகட்டம். அனுமன் சாலிஷா, அனுமன் வழிபாடு உங்களுக்கு அற்புதமான முன்னேற்றத்தைத் தரும். கண்களில் பாதிப்புள்ளோர் பார்த்துக் கொள்வது நல்லது. முருகப் பெருமான் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.மிதுனம் ராசி பலன்
முயற்சியில் வெற்றி
அனுகூலம்
கடன் தீரும்
வழிபாடு