Mithunam: மிதுன ராசிக்கு நல்ல நேரம் ஸ்டார்ட்.. இந்த 3 விஷயங்களில் ரொம்ப கவனம்


  • Weekly Rasi Palan: ஜூன் 22 முதல் 28 ஆம் தேதி (ஆனி 8 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 22 முதல் 28 ஆம் தேதி (ஆனி 8 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மிதுனம் ராசி பலன்

    மிதுன ராசியினருக்கு பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். தன பாக்கியங்கள் கைகூடி வரும். காசு பணத்திற்கு எந்தவித குறைவும் இருக்காது. நிறைய பேர் தங்கம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். கணவன், மனைவி பேரில் சேமிப்புகளை ஆரம்பிக்கும் யோகம் உண்டு. பேச்சின் மூலமாக தொழில் செய்பவர்களுக்கு பாராட்டுகளும், பொருளாதார முன்னேற்றமும் கிடைக்கும்.

    Advertisement

    கோபம் வேண்டாம்

    தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, மேலதிகாரிகள், அரசியல்வாதிகள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆவேசப்படுவது, கத்துவது, கோபப்படுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. துணை, குடும்பத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதம், சண்டைகளை தவிர்ப்பது நல்லது. உறவுகளுக்குள் கோபமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    கடன் தீரும்

    பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. பொறுமை அவசியம். சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்பில்லாமல் இருப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிப்பதற்கான யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருந்து வந்த பாதிப்புகள் படிப்படியாக குறையும். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

    Advertisement

    ஆரோக்கியம்

    சைக்காலஜிஸ்டுகளுக்கு அற்புதமான வளர்ச்சிகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் புதிய கோர்ஸ்களை படிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். காய்ச்சல், சளி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அலர்ஜி, முதுகு தண்டுவடம் பாதிப்புகளில் கவனம் தேவை. குளிர்ந்த பொருள்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

    வழிபாடு

    கோபத்தை தவிர்த்து இணக்கமாக செல்வது நல்லது. அனுமன் சாலிஷா கேட்பது, அனுமன் கோயில்களில் சேவை செய்வது போன்றவை நன்மையை ஏற்படுத்தும். மூகாம்பிகாதேவி, அனுமன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். நைவேத்தியத்திற்கு மிளகு, கல் உப்பு, மிளகாய் போன்றவற்றை வாங்கி கொடுப்பது நன்மை பயக்கும்.

    English Summary

    Weekly Rasi Palan for Mithunam (மிதுனம் ராசி பலன்): Let us look at the favorable outcomes in store for those born under the Gemini sign during this week, from June 22 to 28 (Aani 8 to 14).