Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்?


  • Weekly Rasi Palan: ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

    அந்த வகையில், ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷப ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, மேலதிகாரிகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இதுவரை தடைபட்டு வந்த விஷயங்கள் அனைத்தும் இனி அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டாகும். சட்டத்திற்குப் புறம்பானவர்களிடம் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும்.

    பாதிப்பு நீங்கும்

    உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எதிர்பாராத விஷயங்கள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. தொழில், உத்தியோகத்தில் உள்ள சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். முன்னேற்றங்களும், அனுகூலமும் ஏற்படக்கூடிய காலகட்டம். உத்தியோக ரீதியாக இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். நிறைய மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    Advertisement

    மாற்றம், முன்னேற்றம்

    இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என பல்வேறு விதமான மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் உங்கள் நலன் விரும்பிகளிடம், குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து செய்வது நல்லது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கையெழுத்து போடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்து போடுவது நல்லது.

    வெளியூர் வேலை

    ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரனருக்கு பல் வலி, கண் வலி, குடும்பத்தில் தகராறுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. விரயத்தில் செவ்வாய் இருப்பதால் கணவன், மனைவிக்கு வெளியூர் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. காசு பணத்திற்கு எந்த பஞ்சமும் இருக்காது. விலை உயர்ந்த பொருள்கள் வாங்கும் யோகம் உண்டு. விருது, அங்கீகாரம், பெயர், புகழ் கிடைக்கும் காலகட்டம். நிறைய முன்னேற்றங்கள் ஏற்படும்.

    Advertisement

    வழிபாடு

    விரயங்கள் அதிமாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை தோறும் ஏழை எளிய மக்களுக்கு சாதம், எலுமிச்சை ஊறுகாய் தானமாக கொடுப்பது நல்லது. நரம்பு, தலைவலி சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனம் தேவை. பெருமாள் தாயார், அனுமன் வழிபாடு உங்களுக்கு அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும்.

    English Summary

    Weekly Rasi Palan for Rishabam (ரிஷபம் ராசி பலன்): In this astrological article, we will examine in detail the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for individuals born under the sign of Rishabam (Taurus) during the week spanning from June 1st to June 7th.