Weekly Rasi Palan: ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். ரிஷப ராசியினருக்கு குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். ஆனி மாதமாக இருந்தாலும் நிறைய நல்ல காரியங்கள் நடக்கும். லாபம், சந்தோஷம் உண்டாகும். பெற்றோர் வழியில் இருந்த பாதிப்புகள் நீங்கும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக் வேண்டும். குடும்பம், வெளிவட்டாரத்தில், வார்த்தைகள் விஷயத்தில் சிறிய கோபங்கள் கூட பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் மனம் விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். தேவையில்லாத வார்த்தைகளை தவிர்ப்பது நன்மை பயக்கும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள், சண்டைகள், வாக்குவாதங்கள் பரிபூரணமாக நீங்கும். மனநிம்மதி இல்லாத தன்மை தீரும். உடல் சூடு, காய்ச்சல், முகம், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. காசு, பணத்திற்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது. நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் நிறைய பயணத்தைக் கொடுப்பார். நிறைய புதிய விஷயங்களை செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். புதிய நண்பர்கள் மூலமாக பெரிய பிரச்சனைகள் சரியாகும். முதலீடுகளில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். பெரிய யோகமும், நல்ல விஷயங்களும் நடக்கும் அற்புதமான காலகட்டம். ரத்தத்தில் பரவும் நோய்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷம் ரீதிாயக 70 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதமும் நன்மைகள் ஏற்படும். முருகர் வழிபாடு, துர்க்கை வழிபாடு உங்களுக்கு சகலவித முன்னேற்றங்களைத் தரும்.ரிஷபம் ராசி பலன்
சொத்து சேர்க்கை
லாபம் கொட்டும்
ஆரோக்கியம்