Weekly Rasi Palan: ஜூன் 22 முதல் 28 ஆம் தேதி (ஆனி 8 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 22 முதல் 28 ஆம் தேதி (ஆனி 8 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். ரிஷப ராசியினர் குடும்பத்தில் குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இழந்த விஷயங்களை எல்லாம் மீண்டும் பெறக்கூடிய அமைப்பு உள்ளது. உங்களை விட்டுச் சென்ற குடும்பம், தொழில் போன்ற விஷயங்கள் எல்லாம் மீண்டும் உங்களை வந்து சேரும். நல்ல நண்பர்களுடன் நெருங்கி பழகுவீர்கள். தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். தொழில் ரீதியாக எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். காது, மூக்கு, தொண்டை விஷயத்தில் சிறிது கவனமாக இருப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிப்பதற்கான யோகம் உண்டாகும். அடுத்தடுத்து சுப காரியங்கள் நடப்பதற்கான நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருக்கும் இடைவெளியை குறைத்துக் கொள்வது நல்லது. இந்த வாரம் முழுவதும் அவசரத்தன்மை இருக்கும். ரிஷப ராசி ஆண்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு வெட்டுக்காயம், சூட்டுக் காயம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உடல் சூடு காரணமாக வாய்ப்புண், மூக்கில் புண் வருவதற்கான வாய்ப்புள்ளது. சண்டை, சச்சரவுகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. புதிய வீடு, புது நிலம் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. விற்பனை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல யோகம் உண்டாகும். ஏங்கிக் கொண்டிருந்த விஷயங்கள் நடக்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். பெரிய வெற்றியைத் தரக்கூடிய மாதமாக அமையும். வண்டியை மாற்றுவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய்க்கிழமை மதிய வேளையில் உணவு தானமளிப்பது நன்மையைத் தரும். தட்சிணாமூர்த்தி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.ரிஷபம் ராசி பலன்
கடன் தீரும்
சுபகாரியம்
அவசரம்
வழிபாடு