Weekly Rasi Palan: ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்திற்கு பிரவேசமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் **சிம்ம ராசியினருக்கு** கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். சிம்ம ராசியினருக்கு தொழிலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் காலகட்டம். நிறைய பேருக்கு வேலை கூட இல்லாமல் போவதற்கான வாய்ப்புள்ளது. பண வரவுகள் உண்டாகும். பணவரவுகள் நன்றாக இருக்கம். முதலீடுகளை மாற்றுவீர்கள். இரவு நேரம் முழுக்க உழைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். கால் நரம்புகள் சுருள்வது, நரம்புகள் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கால் பாதத்தில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ரத்தஅழுத்தம், சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். லாபம், சந்தோஷம், அனுகூலம் காணப்படும். உறவுமுறையில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. 24 வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வயிறு, ஹார்மோன், முதுகு தண்டுவடம் சம்பந்தப்பட்ட சிறு விஷயத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் மன தாங்கல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 70 சதவீதம் நன்றாக இருக்கும். தேவையில்லாத சங்கடங்கள், கஷ்டமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலீடுகள், அரசுத் துறை, அரசியல்வாதிகள், தனியார் துறையில் பெரும் பொறுப்புகளில், பதவிகளில் இருப்பவர்களுக்கு அரசு சார்ந்த விஷயங்கள் நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். உறவுகள் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். சுவாமி மலை முருகப் பெருமான் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.சிம்மம் ராசி பலன்
வெற்றி மேல் வெற்றி
ஆரோக்கியம்
கடன் தீரும்