கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி


  • Weekly Rasi Palan: ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார்.

    சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அந்த வகையில், ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    அந்த வகையில், ஜூன் 1 முதல் 7 ஆம் தேதி (வைகாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    சிம்மம் ராசி பலன்

    சிம்ம ராசியினருக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் புதன், சுக்கிரன் வெற்றி வாய்ப்புகளைக் கொடுக்கும். நிறைய கல்யாணம், சுபநிகழ்ச்சிகளக்குச் செல்வீர்கள். நாட்டியம், பாட்டு போன்றவற்றில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலுக்காக வாங்கியுள்ள கடன், உடம்பு, கால் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் நிவர்த்தியாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகமாக இருந்தால் பெரிய அளவுக்கு வெற்றி ஏற்படும்.

    Advertisement

    கடன் தீரும்

    வேலையில் அதிகளவு அழுத்தம் இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் எந்தவொரு கவலையும் இருக்காது. யோகமான காலகட்டமாக இருக்கும். தெய்வ அனுக்கிரகம் ஏற்படும். பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. விக்னேஷ்வரனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். கடன்களை அடைத்து முடிப்பதற்கான அமைப்பு உண்டு.

    வெளியூர் பயணம்

    விலை உயர்ந்த பொருள்கள் விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணம், தனிப்பட்ட பயணம் ஏற்றத்தை ஏற்படுத்தும். லாபம், சந்தோஷம், அனுகூலம் காணப்படும். வண்டி வாகன மாற்றங்கள், தொழில் மாற்றங்கள் உண்டாகும். வேலை ஆட்களில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக குறையும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

    Advertisement

    கவனம்

    தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். உறவுகள், பெற்றோரிடம் அன்பு காட்டுவது நல்லது. செல்வாக்குகள் கூடும். தொழில் ரீதியாக அற்புதம் ஏற்படும். விநாயகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். புதிய அறிமுகங்களிடம் அதீத கவனம் தேவை. எந்தவொரு ஆசை வார்த்தைக்கும் மயங்காமல் இருப்பது நல்லது. எங்கு சென்றாலும் கவனமாக இருப்பது நன்மை.

    English Summary

    Weekly Rasi Palan for Simmam (சிம்மம் ராசி பலன்): In this astrological article, we will examine in detail the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for individuals born under the sign of Simmam (Leo) during the week spanning from June 1st to June 7th.