இந்த வாரம் துலாம் ராசிக்கு ஜாக்பாட்.. தொழிலில் தொட்டதெல்லாம் துலங்கப் போகுது!


  • Weekly Rasi Palan: ஜூன் 23 முதல் 28 ஆம் தேதி (ஆனி 9 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், துலாம், மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 23 முதல் 28 ஆம் தேதி (ஆனி 9 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் வாரமாக இருக்கும். மற்றவர்களைப் பற்றி கவலை கொள்ளாமல் இருப்பது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது மேன்மையைத் தரும். 6 இல் சனி இருப்பதால் கடுமையாக உடற்பயிற்சி செய்வது நல்லது. சனி உச்சம் பெறக்கூடிய ராசியாக இருப்பதால் பெற்றோர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மை.

    Advertisement

    முன்னேற்றம்

    பிள்ளைகளைப் பற்றி வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவியிடம் இணக்கமாகவும், அன்பாகவும் இருக்க வேண்டும். ஆடி மாதம் வந்த பிறகு தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என எந்த மாற்றங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது.

    தொழிலில் ஜாக்பாட்

    சிலருக்கு தொழில் போனாலும் கவலை கொள்ளத் தேவையில்லை. மாற்று விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். நரசிம்மர் வழிபாடு, நரசிம்மர் கவசத்தைக் கேட்பது, பானகத்திற்கு வெல்லம், சுக்கு, ஏலக்காய் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பது நல்லது. துணை விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். பண வரவு உண்டாகும். சுபிக்ஷம் ஏற்படும் நல்ல காலகட்டமாக இருக்கும்.

    Advertisement

    தொட்டது துலங்கும்

    எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு கூட நிறைய வேலை கிடைக்கும். வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒரு சிலருக்க பின்பக்க வலிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி, திருப்தி அதிகரிக்கும்.

    ஆரோக்கியம்

    அடிவயிறு அலர்ஜி, ஜாயிண்டுகளில் வலி, மன அழுத்தம் போன்றவற்றை பார்த்துக் கொள்ள வேண்டும். புதன்கிழமை தோறும் உணவு தானமாக கொடுப்பது ஏற்றத்தைத் தரும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வண்டிக்கு சிறு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதமும் நன்மைகள் நடக்கும் நல்ல காலகட்டம்.

    English Summary

    Weekly Rasi Palan for Thulam (துலாம் ராசி பலன்): Let us look at the favorable outcomes in store for those born under the Libra sign during this week, from June 23 to 28 (Aani 9 to 14).