இந்த வார ராசி பலன்கள் (15-03-2019 முதல் 21-03-2019 வரை )


-ஜோதிடர் மயூராஅகிலன்

சென்னை: இந்த வாரம் முதல் சூரியனின் பயணம் மீனத்தில் தொடங்குகிறது. மற்ற கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மேஷத்தில் செவ்வாய், மிதுனத்தில் ராகு விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி, கேது மீனத்தில் புதன் மகரம் ராசியில் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் சந்திரன் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த வாரம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.

கிரகங்களின் சஞ்சாரம்

சூரியன் - மீனம் ராசி
செவ்வாய் - மேஷம் ராசி
புதன் - மீனம் ராசி வக்ரம் கும்ப ராசி
குரு - விருச்சிகம் ராசி
சுக்கிரன் - மகரம் ராசி
சனி - தனுசு ராசி
ராகு - மிதுனம் ராசி
கேது - தனுசு ராசி


சந்திரன் சஞ்சாரம் சந்திராஷ்டமம் ராசிகள்

மார்ச் 15ஆம் தேதி முதல் 16ஆம் தேதி இரவு வரை மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார் விருச்சிகம் ராசிக்கு சந்திராஷ்டமம்

மார்ச் 16 ஆம் தேதி இரவு 8.38 மணி முதல் மார்ச் 18 இரவு 09.48 மணிவரை வரை கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார் தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம்

மார்ச் 18 பகல் 09.48 மணி முதல் மார்ச் 20 விடிகாலை 9.35 மணிவரை சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார் மகரம் ராசிக்கு சந்திராஷ்டமம்.

மார்ச் 20 முதல் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார் இரண்டு நாட்களுக்கு கும்பம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்

மேஷம்:

லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் சஞ்சரிப்பதால் அப்பாவிற்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். வரிகளை கட்டி விடுவது நல்லது. சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளது. மன நிம்மதியை ஏற்படுத்தும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முன் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். புதன் சஞ்சாரத்தினால் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வுகளை நன்றாக எழுதுவீர்கள். சிலர் படிப்புக்காக வெளிநாடு செல்வீர்கள். குரு உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கவனம் தேவை. நண்களுக்கு கூட பணம் கடன் கொடுக்க வேண்டாம். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் மேன்மை பளிச்சிடும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பதால் அப்பாவினால் உடல் நலனில் அக்கறைக் காட்டுங்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் உண்டாகும். பொதுவாகவே நீங்கள் உங்களின் முன் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தினால் பணத்தை மிச்சப்படுத்தலாம். பண விசயத்தில் எச்சரிக்கை தேவை. பெரிய அளவில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். முயற்சி ஸ்தானத்தில் ராகுவும், பாக்ய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்தும். இந்த வாரத்தில் முருகனை செவ்வாய் கிழமைகளில் வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும். இந்த வாரம் உற்சாகமாக இருப்பீர்கள். மாணவ, மாணவிகள் நன்றாக தேர்வு எழுதுவீர்கள். ராசியான நாட்கள் புதன், வியாழன் ராசியான எண்கள் 7, 9.

ரிஷபம்

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும்.சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக உள்ளது. மனதில் நிம்மதி ஏற்படும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். வீடு பராமரிப்பதற்காக செலவுகள் அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பணவரவு அதிகரிக்கும். குரு பார்வையால் பொருளாதார ரீதியாக நன்மை கிடைக்கும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் சஞ்சரிக்கிறார். வாழ்க்கைத்துணை மூலம் பண வரவு உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் வருமானம் கிடைக்கும். வேலைச்சுமையால் உடலில் அசதி ஏற்படும். பேச்சில் சற்று நிதானம் தேவை. மற்றவர்கள் விசயத்தில் தலையிட வேண்டாம். நண்பர்கள் உறவினர்களை அனுசரித்து செல்லுங்கள். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் பண வரவு அதிகரிக்கும். பெண்களுக்கு உடலில் லேசான அசதி ஏற்படும். மாணவ, மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்துவதோடு விடைகளை எழுதி பாருங்கள். ராசியான நாட்கள் செவ்வாய், வெள்ளி ராசியான எண்கள் 5,9.

மிதுனம்

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு வேலை விசயமாக வெளியூர், வெளிநாடு பயணம் செய்ய வேண்டியிருக்கும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளதால் மனதில் அமைதி குடியேறும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் லாப ஸ்தானத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை மூலம் பண வருமானம் அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறும். புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் கல்வியில் மேன்மை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்வீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபார வாடிக்கையாளர்களினால் நன்மை உண்டாகும், நண்பர்களுடன் நல்லுறவு அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும். பெண்களுக்கு வீட்டிலும் வெளியிடத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணம் விசயத்தில் சற்று கவனத்தோடு செயல்படவும். இந்த வாரம் நீங்கள் ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வணங்க நன்மைகள் நடைபெறும். ராசியான நாட்கள் திங்கள், ஞாயிறு, ராசியான எண்கள் 1,9.

கடகம்:

சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ராசிக்கு பத்தில் செவ்வாய் சிறப்பானது. தொழில் முதலீடுகள் லாபத்தை அதிகரிக்கவும். அப்பாவின் சொத்துக்களில் பங்கு கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் வார இறுதியில் சாதகமான நிலையில் உள்ளது. மனதில் நிம்மதியும் அமைதியும் பிறக்கும். புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் வரும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் செல்வீர்கள். குரு பார்வை ஜென்ம ராசி மீது விழுவதால் பணவரவுக்கு பஞ்சமிருக்காது. சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். ஆறாம் வீட்டில் சனியோடு கேது இணைந்து சஞ்சரிப்பதால் எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். வழக்குகள் முடிவுக்கு வரும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும் மனதில் உற்சாகம் பிறக்கும். விஷ்ணுவையும், ராகு காலத்தில் துர்க்கை அம்மனையும் வழிபட நன்மைகள் நடைபெறும். ராசியான எண்கள் 2, 7.

சிம்மம்

சூரியன் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நிதானத்தோடு செயல்படுங்கள். கணவன் மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமான நிலையில் சஞ்சரிக்கிறார். மனதில் அமைதி ஏற்படும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை அழகு படுத்துவீர்கள். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு வேண்டாம். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும்.
ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். பெண்களின் மனதில் லேசான கலக்கம் ஏற்படும். பணம் விசயத்தில் சிக்கனத்தோடு செயல்படுங்கள். புதிய முயற்சிகளைத் தள்ளி வையுங்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டவும். சிவ வழிபாடு செய்வதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். ராசியான எண்கள் 6,9.

கன்னி

ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன், எட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் வார இறுதியில் சாதகமாக இல்லை. செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் திடீர் தொல்லைகள் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுடன் வெளியூர் செல்வீர்கள். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். வண்டி வாகனங்களின் செல்லும் போது கவனம் தேவை. பணம் விசயத்தில் சிக்கனமாக செயல்படுங்கள். தேவையற்ற அலைச்சல் ஏற்படும். புதிய முதலீடுகளை தள்ளி வைக்கவும். பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மாணவர்களின் மனதில் தைரியம் கூடும். முருகன் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் அதிகம் நடைபெறும். தேர்வு நேரத்தில் படிப்பில் கவனம் செலுத்தவும். ராசியான எண்கள் 8,9.

துலாம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் கவனம் தேவை. சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. மனதில் அமைதி பிறக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் எல்லோரையும் அனுசரித்து செல்லவும். வீடு நிலம் வாங்கி விற்கும் தொழில் தொழில் சிறப்படையும். புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எந்த பிரச்சினைகளிலும் தலையிட வேண்டாம். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சினில் இனிமை அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருக்கிறார் வெளியூர் பயணம் வெற்றியடையும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் புத்தியில் கலக்கம் உண்டாகும். இந்தவாரம் மறைமுக எதிர்ப்புகள் விலகி விடும். தொழிலில் லாபம் கிடைக்கும். அம்மன் வழிபாடு நன்மைகளை அதிகம் கொடுக்கும். பெண்களின் மனதில் தைரியம் கூடும். மாணவர்களின் திறமை அதிகரிக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ராசியான நாட்கள் புதன், வியாழன். ராசியான எண்கள் 5,9.

விருச்சிகம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியன், ஆறில் செவ்வாய் சஞ்சரிப்பது நன்மை தரும் அமைப்பாகும். தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக இல்லை. சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை. செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகலாம். கமிஷன் புரோக்கரேஜ் தொழில் விருத்தியடையும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மகிழ்ச்சி குடியேறும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சிறு உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்த்தோஷம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் யாரிடமும் விதண்டாவாதம் செய்யாதீர்கள். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். பெண்களுக்கு வேலைப்பளு கூடும். மாணவர்களின் மனதில் தெம்பும் உற்சாகமும் கூடும். தேர்வுகளை நன்றாக எழுதும் வகையில் புத்திசாலித்தனம் பளிச்சிடும். இந்த வாரம் ராசியான நாட்கள் புதன், வியாழன். ராசியான எண்கள் 5,9.

தனுசு

சூரியன் நான்கில் சஞ்சரிப்பதால் சில தடைகள் ஏற்படும். எதிலும் நிதானத்தோடு செயல்படுங்கள். சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக உள்ளது மனதில் அமைதி குடியேறும் நிம்மதி பிறக்கும். வார மத்தியில் கவனம் தேவை. செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீக திருப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சனி உங்களின் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மந்த நிலை உண்டாகும் உடல் உழைப்பினால் வேலைப்பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பணவரவு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அக்கம் பக்கத்தினரால் நன்மை கிடைக்கும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும். சந்திராஷ்டமம் இருப்பதால் கவனத்தோடு இருப்பது நல்லது. பெண்களின் மனதில் உற்சாகம் பிறக்கும். மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும். படித்து எழுதி பார்ப்பது நல்லது. ராசியான நாட்கள் வியாழன், சனி ராசியான எண்கள் 3,6.

மகரம்

சூரியன் முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் உங்கள் மீது அக்கறைக் காட்டுவீர்கள். உயர்பதவி உங்களை தேடி வரும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளது. வார இறுதியில் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி முதலீடுகள் அதிகரிக்கும். விரைய சனி காலம் என்பதால் பெண்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும். மாணவர்கள் தேர்வு நேரத்தில் வீண் பொழுது போக்குகளில் கவனம் செலுத்த வேண்டாம். முருகனை வெள்ளிக்கிழமைகளில் வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும். ராசியான நாட்கள் வியாழன், சனி. ராசியான எண்கள் 3,8.

கும்பம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் மனதில் தெளிவும் அமைதியும் பிறக்கும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் வசீகரம் அதிகரிக்கும். பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். அப்பாவின் வழியில் வருமானம் கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வங்கி தொழில் சிறப்படையும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டிற்கு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். ராசி அதிபதி சனி கேது சேர்க்கை பெற்று இருப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். நினைத்தது நடைபெறும். தொழில் ரீதியாக வெற்றிகள் கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை. அலுவலகத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். துர்க்கை வழிபாடு நன்மைகளை அதிகம் தரும் ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செல்லும். பெண்கள் தங்களின் மனதில் உள்ள குறைகளை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் வீண் பிரச்சினை வரும். ராசியான நாட்கள் திங்கள், புதன் ராசியான எண்கள் 6,9.

மீனம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தலைமைப் பதவி தேடி வரும். சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக இல்லை. மனதில் கலக்கம் ஏற்படும் அமைதி காக்கவும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் பதவி உயர்வு கிடைக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். பாக்ய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் முன்னேற்றமான பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார் சாதகமான பலன்களைக் கொடுக்கும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்து சரி செய்து வைத்துக் கொள்வது நல்லது. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் எளிமையாக நிறைவேறும். பெண்கள் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். பயணங்கள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. ராசியான நாட்கள் செவ்வாய், வியாழன். ராசியான எண்கள் 2,8

Tamil.oneindiaவின் புதிய Facebook ஜோதிட app-ஐ இன்னும் பயன்படுத்தவில்லையா??

Have a great day!
Read more...

English Summary

thatstamil presents Weekly astrology forecast, free astrology, predictions and more. அனைத்து ராசிகள், நட்சத்திரங்களுக்கு தட்ஸ்தமிழ் வழங்கும் வார ராசி பலன்