துலாம், விருச்சிகம், தனுசு அடிக்கும் ஜாக்பாட்?.. 2026 ஆகஸ்ட் மாத முழு பலன்கள்

  • August Matha Palan 2026: ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு 2, 7க்கு உடைய செவ்வாய் பகவான் 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். இது கோபுர கலச யோகமாகும். பூமி சார்ந்த லாபங்கள் கொட்டும். ரியல் எஸ்டேட், சிவில் துறையில் இருப்பவர்களுக்கு புதிய புதிய ப்ராஜெக்ட்கள் கிடைக்கும். அனைவராலும் விரும்பப்படக் கூடிய பொறியாளராக இருப்பீர்கள். பெரிய பெரிய ப்ராஜெக்ட்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை, ஜல்லி, மணல் துறையில் இருப்பவர்களுக்கு யோகங்கள் உண்டாகும். தொழிலில் மிகப்பெரிய ஏற்றம் உண்டாகும். பங்குச் சந்தையில் வெற்றி பெறுவீர்கள்.

    Advertisement

    10 ஆம் இடத்தில் குரு பகவான் இருக்கிறார். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகள் அல்லது உங்களாலேயே பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். சனி 6 ஆம் இடத்தில் வக்கிரம் பெற்றிருப்பதால் 12, 13 ஆம் இடத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதால் வேலையில் பொறுமை, நிதானம் தேவை. புதிய ப்ராஜெக்ட்களை செய்யாமல் இருப்பது நல்லது. மேலதிகாரிகளிடம் இணக்கமாகச் செல்வது நல்லது.

    11 ஆம் இடத்தில் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். சோஷியல் மீடியாவில் பதிவு போடுவதை தவிர்ப்பது நல்லது. தலைமையை விமர்சிக்காமல் இருப்பது மேன்மையைத் தரும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு விமர்சனங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. 12 இல் சுக்கிரன் நீச்சமாகி உள்ளார். இதனால், விபரீத ராஜயோகம் உண்டாகும். ஆனால், ஆரோக்கியத்தில் கருமுட்டை, பெண்கள் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    Advertisement

    விருச்சிகம் ராசி பலன்

    விருச்சிக ராசியினருக்கு ராசிநாதன் செவ்வாய் 8 இல் மறைகிறார். விபரீத ராஜயோகம் உண்டாகும். பூமி சார்ந்த லாபங்கள் கிடைக்கும். நிறைய பேருக்கு அரசு வேலை கிடைக்கும். பழைய சண்டைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேரும் யோகம் உண்டாகும். உணர்ச்சிவசப்பட்டு செய்த தவறுகள் எல்லாம் சரியாகும். பழைய நண்பர்கள், சொந்தங்களுடன் மீண்டும் சேர்வீர்கள். உங்களுடைய ராஜ்ஜியம் மீண்டும் சேரும்.

    புதிதாக ஒரு விஷயத்தை செய்வீர்கள். 9 ஆம் இடத்தில் இருக்கும் குரு உங்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய காத்திருக்கிறார்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். 5 ஆம் இடத்தில் சனி வக்கிரமாவதால் குழந்தைகள் சார்ந்த விஷயத்தில் வெற்றி உண்டாகும். ஆண் குழந்தை பிறக்கும் யோகம். 9 ஆம் இடத்தில் சூரியன் ஆட்சி பெறுகிறார். அங்கு புதனும் இருக்கிறார். எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.

    Advertisement

    பழைய கடன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். அப்பாவின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். 7 க்கு உரிய சுக்கிரன் நீச்சமாகியுள்ளதால் திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்கள் இந்த ஒரு மாதம் அந்த விஷயங்களை தள்ளி வைப்பது நல்லது. விசா கிடைப்பது போன்றவை தள்ளிப் போகும். கணவன், மனைவி இருவருக்குள்ளும் வாக்குவாதம் சண்டைகள் வரும்.

    தனுசு ராசி பலன்

    தனுசு ராசியினருக்கு 6க்கு உடைய சுக்கிர பகவான் நீச்சம் பெறுவதால் நோய், கடன் தீரும் யோகம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். ஜூலை 27 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்கிரமாகி இருக்கிறார். மேலதிகாரிகளால் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி உங்கள் திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். சொத்து வாங்குவதற்கான எண்ணங்கள் வந்து சேரும்.

    Advertisement

    இடம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள். 7 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால் கோபுர கலச யோகம் உண்டாகும். வாழ்க்கை அடுத்த படி நிலைக்கு உங்களை கொண்டு செல்லும். குரு பகவான் 8 ஆம் இடத்தில் இருந்து 12, 8 ஐ பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும்.

    சூரிய பகவான் ஆட்சி பெறுவதால் எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பலர் ராணுவம், போலீஸ் வேலைகளுக்குச் செய்யும் யோகம் உண்டாகும். உடற்பயிற்சியை மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். துணைக்கும், உங்களுக்கும் சிறு சிறு சண்டைகள், வாக்குவாதங்கள் வந்து சேரும். புதிதாக காதலிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    English Summary

    August matha palan: July is coming to an end, and August begins tomorrow. In this astrological article, we will look at the benefits and remedial measures for those belonging to the Kadagam, simmam, kanni zodiac sign during this month.