Weekly Rasi Palan: ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். விருச்சிக ராசியினருக்கு பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் குரு அமர்ந்திருப்பதால் தைரியம், வீரியம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு சார்ந்த நபர்களுடன் தொடர்புகள் ஏற்படும். எல்லா விதமான சந்தோஷங்களும் உண்டாகும். எல்லா விஷயங்களையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். செய்யும் காரியம், எடுக்கும் காரியம் அனைத்தும் தள்ளிப் போனாலும் அவை நடக்கும் யோகம் உண்டாகும். எந்த விஷயத்திற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பொறுமை, நிதானத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்தாலே நன்மைகளும், பெரிய வாய்ப்புகளும் வந்து சேரும். எல்லா விஷயத்திலும் பொறுமை உங்களுக்கு சாதகத்தை ஏற்படுத்தும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் யோகம் உண்டு. பிள்ளைகளுக்கு அரசு சார்ந்த சீட் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். 15 நாட்களுக்குப் பிறகு அற்புதமான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். பேச்சுத் திறமை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். வேண்டாமென்றாலும் நிறைய நன்மைகள், பாசிட்டிவான விஷயங்கள் நடக்கும் அமைப்பு உள்ளது. பெரியவர்களிடம், அக்கம்பக்கத்தினரிடம், தொழில் தொடர்பான வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த ஆடி மாதம் முழுவதுமே சிறிது பொறுமை, நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு, மேலதிகாரிகள், அக்கம்பக்கத்தினர், புதிதாக அறிமுகமாகும் நபர் என எல்லா விஷயங்களிலுமே கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சியை தவறாமல் செய்ய வேண்டும். எதிரிகள் உங்களை சுற்றி வலை விரிப்பார்கள். எந்தவொரு விஷயத்திற்கும் அதிகமாகப் பதற்றப்படாமல் இருப்பது ஏற்றத்தைத் தரும். துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வயிறு, முதுகு தொடர்பான விஷயங்களில் மட்டும் மிகுந்த கவனம் தேவை. பெற்றோர் மற்றும் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சந்தோஷம் 90 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதமும் நன்றாக இருக்கும். குலதெய்வ வழிபாடு சகலவித நன்மைகளையும் ஏற்படுத்தும்.விருச்சிக ராசி பலன்
பொறுமை அவசியம்
வாக்குவாதம் வேண்டாம்
பதற்றம்
வழிபாடு