சென்னை: 2026- 2027ஆம் கல்வியாண்டிற்கான இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூலை 31 ஆம் தேதியாகும்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2026-2027 கல்வியாண்டிற்கான பி.என்.ஒய்.எஸ். (BNYS) மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தின் தேர்வுக்குழு, 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் (Bachelor of Naturopathy and Yogic Sciences - BNYS) மருத்துவப் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கொண்ட சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் தகுதியான மாணவர்கள் 13.07.2026 காலை 10.00 மணி முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2026 மாலை 5.00 மணி. பிற வழிகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு முன் விளக்கக் குறிப்பை முழுமையாகப் படித்து, தேவையான ஆவணங்களை சரியாகப் பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ 1000 ஆகும். இந்த படிப்புகளுக்கு வெளிநாட்டவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர் இந்தியராக இருத்தல் வேண்டும். டிசம்பர் 31 ஆம் தேதி அன்று 17 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும். இதற்காக பிறப்பு சான்றிதழ், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவைகளை சான்றாக பயன்படுத்தலாம். ஜாதி சான்றிதழ் இல்லாமல் விண்ணப்பித்தால் அவர்கள் பொது பிரிவினராக (OC)கருதப்படுவர். பொது பிரிவினர் அறிவியல் பாடப்பிரிவுகளில் 50 சதவீதமும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்)- 45 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்பிசி)- 40 சதவீதமும், எஸ்சி, எஸ்டி வகுப்பினர் 35 சதவீதமும் பெற்றிருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் எந்த வகுப்பினராக இருந்தாலும் 40 சதவீத மதிப்பெண் போதுமானது.நீட் முதுநிலை தேர்வு தேதி அறிவிப்பு.. ஆகஸ்ட் 30ல் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிப்பு
விண்ணப்பங்கள் www.tnayushselection.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
தகுதி, இடஒதுக்கீடு, கட்டண விவரங்கள், தேவையான ஆவணங்கள், தரவரிசை மற்றும் கலந்தாய்வு தொடர்பான அனைத்து தகவல்களும் சேர்க்கை விளக்கக் குறிப்பில் (Prospectus) விரிவாக வழங்கப்பட்டுள்ளன.நீட் மறு தேர்வு 2026: எப்படி இருந்தது.. ஈசியா அல்லது கடினமாக? மாணவர்கள் சொல்வது என்ன?
தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு அட்டவணை பின்னர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் தகவல்களுக்கு 044-26216244 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம். நீட் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கு.. அதிரடி காட்டிய சென்னை ஐகோர்ட்!