சென்னை: 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. மேலும் இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளின் பட்டியலில், புதியதாக 11 இளங்கலை படிப்புகளும் (Undergraduate Courses), 10 முதுகலை படிப்புகளும் (Post Graduate Courses), 2 பட்டய படிப்புகளும் (Diploma) சேர்க்கப்பட்டுள்ளது . ரூ.135பதில் 12000 ரூபாய் என்கிற அளவில் 9 மடங்கு கல்வி உதவி தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
வன்னியரசு தலைமையிலான சமூக நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட கல்வி கட்டணங்களை உதவித்தொகையாக வழங்குவது போன்று, சுயநிதி கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு முதல் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்களில் அரசு அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளில் பயிலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்துக் கட்டாய மற்றும் திரும்ப செலுத்தப்படாத கட்டணங்களின் (Compulsory Non-refundable fees) கல்வி உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. - ரூ.1350 B.A. உதவித்தொகை ரூ.11250 எனவும், ரூ.1350 M.A. உதவித்தொகை ரூ.12000 எனவும் உயர்த்தப்படுகிறது - ரூ.2850 http://B.Com., http://B.Com (Hons), http://B.Sc., உதவித்தொகை ரூ.11250 என உயர்த்தப்படுகிறது. - ரூ.4750 Β.Β.Α. உதவித்தொகை ரூ.11250 என உயர்த்தப்படுகிறது. - ரூ.2850 http://M.Com., http://M.Sc., உதவித்தொகை ரூ.12000 என உயர்த்தப்படுகிறது. மேலும், இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளின் பட்டியலில், புதியதாக 11 இளங்கலை படிப்புகளும் (Undergraduate Courses), 10 முதுகலை படிப்புகளும் (Post Graduate Courses), 2 பட்டய படிப்புகளும் (Diploma) சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையினால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அமைச்சர் வன்னியரசு கூறுகையில், "15 ஆண்டுகளுக்கு பிறகு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை நமது மாண்புமிகு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது! மேலும் இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளின் பட்டியலில், புதியதாக 11 இளங்கலை படிப்புகளும் (Undergraduate Courses), 10 முதுகலை படிப்புகளும் (Post Graduate Courses), 2 பட்டய படிப்புகளும் (Diploma) சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நமது அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையினால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார்.