சென்னை: என்ஜினியரிங் கலந்தாய்வின் முதல் சுற்றில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் தேர்வு செய்த டாப் 10 கல்லூரிகளின் பட்டியலில், கிண்டி அண்ணா பல்கலைக்கழக கல்லூரி முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி (MIT) இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (CIT) 3-வது இடத்திலும், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி 4-வது இடத்திலும், கோவையின் பி.எஸ்.ஜி ஐ.டி (PSG iTech) 5-வது இடத்திலும் உள்ளன.
என்ஜினியரிங் கலந்தாய்வின் முதற்கட்ட சுற்றின் (Round 1) முடிவில், மாணவர்களிடையே மிக அதிக வரவேற்பைப் பெற்ற முன்னணி கல்லூரிகளின் சேர்க்கை விவரங்கள் வெளியாகியுள்ளன.
கிண்டி பொறியியல் கல்லூரி (CEG, அண்ணா பல்கலைக்கழகம்): முதலிடத்தில் உள்ள இக்கல்லூரியில், மொத்தம் உள்ள 1,160 இடங்களில் 1,138 இடங்கள் நிரம்பி, 98.1% சேர்க்கையுடன் 22 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. எம்.ஐ.டி, குரோம்பேட்டை (MIT): 762 இடங்களில் 739 இடங்கள் நிரம்பி (97.0%), 23 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. கோவை தொழில்நுட்பக் கல்லூரி (CIT): 621 இடங்களில் 597 இடங்களை நிரப்பி, 96.1% சேர்க்கையைப் பெற்றுள்ளது. சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (CIT): சென்னை பகுதியில் உள்ள சுயநிதி கல்லூரிகளில் முன்னணியில் உள்ள இக்கல்லூரி, 1,414 இடங்களில் 1,354 இடங்களை நிரப்பி 95.8% சேர்க்கையைப் பெற்றுள்ளது. இதேபோல பிற முன்னணி கல்லூரிகளின் சேர்க்கை விவரங்கள்: பி.எஸ்.ஜி ஐ.டி (PSG iTech): 93.5% (576/616) பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி (PSG Tech): 91.2% (852/934) கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி (GCT): 89.7% (621/692) மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி (TCE): 89.5% (832/930) கோவை ஸ்ரீ ஈஷ்வர் கல்லூரி: 86.0% (576/670) கோவை குமரகுரு கல்லூரி (KCT): 84.0% (769/915) அண்ணா பல்கலைக்கழக மண்டல மையம் (கோவை): 81.1% (304/375) ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை (REC): 77.5% (1,520/1,961) சேலம் அரசு பொறியியல் கல்லூரி: 77.3% (372/481) ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (RIT): 75.7% (719/950) காரைக்குடி அழகப்ப செட்டியார் கல்லூரி (ACGCET): 75.5% (321/425) தமிழ்நாட்டிலுள்ள மொத்தம் 424 பொறியியல் கல்லூரிகளில், வெறும் 17 கல்லூரிகள் மட்டுமே முதற்கட்ட சுற்றிலேயே 75%-க்கும் அதிகமான இடங்களை நிரப்பியுள்ளன. மேலும் 10 கல்லூரிகள் 50% முதல் 75% வரையிலான இடங்களை நிரப்பியுள்ளன. சென்னை மண்டலத்தைப் பொறுத்தவரை, மாணவர்களின் தேர்வில் தனியார் சுயநிதி கல்லூரிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன என்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.