மாணவர்களுக்கு எல்ஐசி வழங்கும் மிகப்பெரிய கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • சென்னை: பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற குடும்பத்தின் மாணவ-மாணவியருக்காக எல்.ஐ.சி. பொன்விழா கல்வி உதவித்தொகை திட்டம் 2026ன் படி எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம். பொருளாதாரத்தில் பின்தங்கிய நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், எல்.ஐ.சி பொன்விழா அறக்கட்டளை சிறப்புக் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.. 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுத் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

    Advertisement

    பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்விக்காக ஆண்டுதோறும் ரூ.40,000 வரை கல்வி உதவித்தொகையை எல்ஐசி வழங்கி வருகிறது. இந்த உதவி தொகையை பெறுவதற்கு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் தொழிற்கல்வி படிப்புகள் படிக்க, இந்த மாதம் (செப்டம்பர் முதல் அக்டோபர் வரை வரை எல்.ஐ.சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

    Advertisement

    எல்ஐசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கல்வி உதவித் தொகை வழங்கப்படுவோரின் எண்ணிக்கை 13440 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. பொன்விழா குழுமம் 2023-24, 2024-25 அல்லது 2025-26 கல்வி ஆண்டுகளில், அனைத்து இந்திய அடிப்படையில் X/XII/டிப்ளமோ அல்லது அதற்கு சமமான தேர்வுகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான CGPA கிரேடு தேர்ச்சி பெற்று, கல்வி ஆண்டு 2026-27ல், முதல் ஆண்டு சேர்க்கை பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

    தொடர்ந்து படிக்க விரும்பும் (12-ம் வகுப்பு அல்லது பட்டயக் கல்விக்கு பின்பு) மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைகள்;
    மருத்துவம், பொறியியல், பட்டயக்கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு அல்லது ஒருங்கிணைந்த பாடப் பிரிவுகள்

    Advertisement

    தொடர்ந்து படிக்க விரும்பும் (10-ம் வகுப்பு அல்லது பட்டயக் கல்விக்கு பின்பு) மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகைகள்;

    வகுப்பு XI & XII / 10+2 வகையின் கீழ் இன்டர்மீடியட், பட்டயக் கல்வி/தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பாடப் பிரிவுகள்

    ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, திட்டத்தின் இதர தகுதி விதிகள் மற்றும் விபரங்களை அறிய தயவுசெய்து [https://licindia.in](https://licindia.in) இணையதளத்தில் கோல்டன் ஜூபிலி ஃபெளண்டேஷன் என்பதை பாருங்கள்

    ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 30.09.2026 .

    குறிப்பு: விண்ணப்பங்கள் நிலை சம்பந்தமான எந்த விதமான கேள்விகளும் அல்லது கடிதங்களும், அழைப்புகளும் ஏற்கப்படாது என்பதை தயவு செய்து கவனியுங்கள். கல்வி உதவித் தொகைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    In this post, let us look at the details of the LIC Golden Jubilee Scholarship Scheme 2026 for students from economically disadvantaged families.