JEE எழுதாமலேயே ஐஐடி மெட்ராஸில் சேருவது எப்படி? யார் விண்ணப்பிக்கலாம்? விண்ணப்பிக்கும் முறை

  • சென்னை: ஐஐடி மெட்ராஸ், தனது டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் பாடப்பிரிவில் பிஎஸ் பட்டப்படிப்பைப் பெற மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. வளாகத்தில் தங்கிப் படிக்கத் தேவையில்லாத முறையில் இதற்கான சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்கள் இப்பாடப்பிரிவில் சேர ஜேஇஇ தேர்வு எழுதுவது கட்டாயமில்லை; ஏனெனில், இதற்காக ஐஐடி மெட்ராஸ் தகுதித் தேர்வு மூலமாக நேரடியாகச் சேரும் முறையை வழங்குகிறது. செப்டம்பர் 2026 பருவத்திற்கான தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கக் கடைசி நாள்: செப்டம்பர் 27, 2026.

    Advertisement

    ஐஐடி மெட்ராஸில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது இங்கு பலருக்கும் கனவு. அந்த கனவை நிறைவேற்ற வேண்டும் என்றால் ஜேஇஇ தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஜேஇஇ தேர்வு எழுதாமலேயே அங்கு சேர முடியும். அதுவும் பலரும் விரும்பி படிக்கும் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் பாடப்பிரிவில் பிஎஸ் பட்டப்படிப்பை படிக்க ஜேஇஇ தேர்வு எழுத தேவையில்லை. இதற்கு எப்படி விண்ணப்பிகலாம் என்பதை விவரமாக பார்க்கலாம்.

    Advertisement

    12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களின் வயது அல்லது கல்விப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், 11-ஆம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்; அவர்கள் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு இதில் இணைந்து கொள்ளலாம்.

    ஐஐடி மெட்ராஸ் சேர்க்கை 2026: தகுதித் தேர்வு மற்றும் தேர்ச்சி அளவுகோல் என்ன

    ரெகுலர் என்ட்ரி மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள், 4 வார கால தகுதித் பாடப்பிரிவுகளை நிறைவு செய்ய வேண்டும். இதில் ஆங்கிலம் I , டேட்டா சயின்ஸிற்கான கணிதம் I , டேட்டா சயின்ஸிற்கான புள்ளியியல் I மற்றும் கம்ப்யூட்டேஷனல் திங்கிங் ஆகிய பாடங்கள் அடங்கும்.

    Advertisement

    பயிற்சிப் பணிப் புள்ளிகள் (அசைன்மெண்ட் ஸ்கோர்ஸ்):

    பொதுப் பிரிவினர் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40% சராசரி மதிப்பெண் பெற வேண்டும்.

    SC / ST / 40% மாற்றுத்திறனாளிப் பிரிவினர் 30% பெற வேண்டும்.

    OBC-NCL / EWS பிரிவினர் 35% பெற வேண்டும்.

    தகுதித் தேர்வில் தேர்ச்சி எப்படி

    பொதுப் பிரிவினர் ஒவ்வொரு பாடத்திலும் 40% மதிப்பெண்ணும், ஒட்டுமொத்தமாகச் சராசரியாக 50% மதிப்பெண்ணும் பெற வேண்டும்.

    OBC-NCL / EWS பிரிவினர் ஒவ்வொரு பாடத்திலும் 35% மற்றும் சராசரியாக 45% பெற வேண்டும்.

    Advertisement

    SC / ST / மாற்றுத்திறனாளிப் பிரிவினர் ஒவ்வொரு பாடத்திலும் 30% மற்றும் சராசரியாக 40% பெற வேண்டும்.

    செப்டம்பர் 2026 பருவத்திற்கான தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் செப்டம்பர் 27ம் தேதி வரை ஓபனில் இருக்கும் என ஐஐடி மெட்ராஸ் அறிவித்துள்ளது.

    JEE வழியிலான சேர்க்கை

    சமீபத்திய JEE Advanced தேர்வு எழுதத் தகுதி பெற்ற மாணவர்கள், ஐஐடி மெட்ராஸ் BS திட்டத்தின் அடிப்படை நிலைக்கு நேரடியாகச் சேர்க்கை பெறலாம். இத்தகைய மாணவர்கள் அடிப்படை நிலைக் கல்வி சேர்க்கைக்கான வழக்கமான தகுதித் தேர்வு நடைமுறையில் எழுத வேண்டிய கிடையாது. அவர்கள் நேரடியாக சேர்க்கை பெறுவார்கள்.

    English Summary

    IIT Madras BS Admission 2026 without JEE: Studying at IIT Madras is a dream for many. Many believe that clearing the JEE exam is a prerequisite to realizing this dream. In reality, however, it is possible to gain admission there without taking the JEE exam.