சென்னை: சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக பரவும் தவறான தகவல் குறித்து தமிழக அரசு உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியான ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பரவும் செய்தி, சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
இது முற்றிலும் தவறான தகவல். இது தொடர்பாக சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் அளித்துள்ள விளக்கத்தில்," கடந்த மார்ச் மாதத்திலிருந்து 1,724 பேருந்துகள் மகளிர் இலவச சேவைக்காக இயக்கப்படுவதாகவும், தற்பொழுது அப்பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர் ! இவ்வாறு தமிழக அரசு உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.உண்மை என்ன ?