ஜகார்த்தா: இந்தோனேசியாவில், தனது வீட்டில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வந்ததால் வீட்டு உரிமையாளர் ஒருவர், தனது பக்கத்து வீட்டாருடன் இணைந்து திருடர்களைப் பிடிக்க ஒரு ரகசியத் திட்டத்தைத் தீட்டி, வீட்டிற்குள் நுழைய முயன்ற 4 திருடர்களை கையும் களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பதற்கு முன்பாக ஒரு விசித்திரமான தண்டனையை வழங்கியதாக ஒரு செய்தி பரவி வருகிறது.
பிடிபட்ட திருடர்கள் நால்வரையும் அவர்கள் நகர முடியாதபடி பேக்கிங் டேப் மூலம் முழுமையாகச் சுற்றி, அவர்களை புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களான Teletubbies போல ஆக்கி நூதன முறையில் தண்டித்ததாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
உடல் முழுவதும் பேக்கிங் டேப்பால் சுற்றப்பட்ட 4 நபர்கள், குழந்தைகள் நிகழ்ச்சியில் வரும் Teletubbies கதாபாத்திரங்களைப் போல தோற்றமளிக்கும் வீடியோ ஒன்று "திருடர்களைப் பிடித்த பொதுமக்கள் கொடுத்த நூதன தண்டனை" என்ற கேப்ஷன் உடன் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால், இந்த தகவல் உண்மையல்ல. இதுகுறித்து அந்த வீடியோவில் இடம்பெற்றவர்களே விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள், இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாநிலம், மலாங் பகுதியைச் சேர்ந்த கண்டெண்ட் க்ரியேட்டர்களாம். அவர்கள் TikTok Live நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் விடுத்த சவால்ஒன்றை ஏற்று, உடல் முழுவதும் டேப்பால் சுற்றிக்கொண்டு நகைச்சுவையாக இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோவை சிலர் பதிவிறக்கம் செய்து சமூக வலைதளத்தில், "சிக்கிய திருடர்கள்.. Teletubbies போல டேப்பால் சுற்றப்பட்ட சம்பவம்" என்கிற ரீதியில் தவறான கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளனர். இதனால் அந்த வீடியோ உண்மையான சம்பவம் எனப் பலரும் நம்பிப் பகிரத் தொடங்கினர். எனவே "திருடர்களுக்கு வினோத தண்டனை.. பேக்கிங் டேப்பால் சுருட்டிப் போட்ட கடை உரிமையாளர்" என்ற வைரல் தகவல் தவறானது. உண்மையில், அது மலாங் பகுதியைச் சேர்ந்த இரண்டு Content Creators உருவாக்கிய நகைச்சுவை வீடியோ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.பரவி வரும் வீடியோ
உண்மை என்ன?