5 கோடி மதிப்பிலான MRI Scan கருவியை ரூ 7 கோடிக்கு வாங்கி ஊழல் செய்ததா தவெக அரசு? உண்மை என்ன?


  • சென்னை: ரூ.5 கோடி மதிப்பிலான எம்.ஆர்.ஐ இயந்திரத்தை ரூ.7 கோடிக்கு வாங்க டெண்டர் கோரப்பட்டதாக பரவும் தவறான தகவல் என தமிழ்நாடு அரசு சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    இதுகுறித்து TN Fact check எனும் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் 29 எம்.ஆர்.ஐ இயந்திரங்கள் வாங்க விடப்பட்டுள்ள டெண்டரில், இந்தியாவில் ரூ.5 கோடியில் கிடைக்கும் எம்.ஆர்.ஐ இயந்திரத்தை ரூ.7 கோடிக்கு வாங்க டெண்டர் கோரப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.

    Advertisement

    உண்மை என்ன ?

    இது முற்றிலும் தவறான தகவலாகும். இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் அளித்துள்ள விளக்கத்தில், "தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூன்று ஆண்டுகளுக்கு எம்.ஆர்.ஐ கருவிகளை கொள்முதல் செய்ய ரேட் காண்ட்ராக்ட் ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்றது. இதில் பிலிப்ஸ், சிமேன்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் செக்குயுயா என்ற இந்திய நிறுவனமும் பங்கேற்றது.

    ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளின் படி சி.டி.எஸ்.கோ சான்றுடன் யு.எஸ்.எப்.டி.எ / சி.இ என்ற சான்றுகளும் உள்ள கருவிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட முடியும். யு.எஸ்.எப்.டி.எ / சி.இ சான்று தேவை என்ற நிபந்தனை, 2001ஆம் ஆண்டிலிருந்து வாங்கப்பட்ட எல்லா எம்.ஆர்.ஐ கருவிகளுக்கு தரம் மற்றும் மருத்துவப் பயனாளிகளின் பாதுகாப்பு அடிப்படையில் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    செக்குயுயா நிறுவனம் முன்மொழிந்த கருவிகளுக்கு யு.எஸ்.எப்.டி.எ / சி.இ சான்று மற்றும் சில தொழில் நுட்ப குறிப்புகள் இல்லை என்பதால் அவை வல்லுனர் குழுவால் நிராகரிக்கப்பட்டன. இதை எதிர்த்து செக்குயுயா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அவ்வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தவறான தகவலைப் பரப்பாதீர்... என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Fact Check

    வெளியான செய்தி

    தமிழக சுகாதாரத் துறை சார்பில் எம்ஆர்ஐ இயந்திரம் வாஹ்க விடப்பட்டுள்ள டென்டரில் இந்தியாவில் ஒரு எம்ஆர்ஐ இயந்திரம் 5 கோடிக்கு கிடைக்கும் நிலையில் வெளிநாட்டில் இருந்து 7 கோடிக்கும் அதிகமாக எம்ஆர்ஐ இயந்திர

    முடிவு

    ரூ 5 கோடி எம்ஆர்ஐ இயந்திரத்தை ரூ 7 கோடிக்கு வாங்கவில்லை.

    ரேட்டிங்

    False
    பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - factcheck@one.in

    English Summary

    MRI Tender Controversy was dismissed by Tamil Nadu’s fact-check unit, which clarified that claims alleging a ₹5 crore MRI machine was tendered for ₹7 crore are false and misleading.