Gold Price: இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி! 8 நாட்களில் 4,480 சரிந்தது

  • சென்னை: தங்கம் விலை (Gold Price) கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.3,440 குறைந்து இருந்தது. வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்றும் அதிரடியாக விலை குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    Advertisement

    தங்கம் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. அதிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து உச்சம் தொட்டு இருக்கிறது. ஒரு லட்சத்தை தொட்டு விடுமோ என பயந்த நகை பிரியர்கள் தற்போது சவரன் ஒன்றரை லட்சத்தை தொட்டுவிடுமோ என கவலையடைந்துள்ளனர். அந்த அளவுக்கு தங்கம் விலையானது ராக்கெட் வேகத்தில் பறந்து வருகிறது.

    Advertisement


    சரிந்து வரும் தங்கம் விலை

    எனினும் கடந்த 3 மாதங்களாக தங்கம் விலை பெரிய அளவில் உயராமல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து தாக்குதல் தொடுத்ததில் இருந்தே தங்கம் விலை சரிய தொடங்கியது. பின்னர் போர் நிறுத்தம் ஏற்பட்ட போது மீண்டும் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்தது. ஆனால் அடுத்த நாளே அந்த விலையில் இருந்தும் குறையத் தொடங்கியது.

    பெரிய அளவில் தங்கம் விலை உயராமல் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்து வருவதால் நகை பிரியர்கள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர். எப்போது தங்கம் விலை குறையும், நகைகள் வாங்கி போடலாம் என நினைத்தவர்களும் தற்போது நகைகள் வாங்க தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக கடந்த வாரம் இதே ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Advertisement

    தங்கம் விலை இன்றும் சரிந்தது

    அப்போது இருந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. ஒரே வாரத்தில் தங்கம் விலை ரூ.3,440 குறைந்துள்ளது. நேற்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று ரூ.14,200-க்கு விற்பனை ஆனது. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை குறையுமா என நகை பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

    தங்கம், வெள்ளி விலை என்ன?

    இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.130 குறைந்து ரூ.14,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 8 நாட்களில் மட்டும் ரூ.4,440 குறைந்துள்ளது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    Advertisement

    தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் குறைந்து வருகிறது. வெள்ளி விலையும் கடந்த 4 நாட்களாக அதிரடியாக குறைந்தது. நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.


    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

    08.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560
    07.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
    06.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
    05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,440
    04.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,840
    03.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000

    Advertisement

    02.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000
    01-06-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
    31-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
    30-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
    29-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

    28-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
    27-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
    26-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
    25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
    24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840

    23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
    22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
    21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480
    20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960

    Advertisement

    18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120
    14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400

    13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200
    12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640
    11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
    10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200

    08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
    05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
    04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000

    English Summary

    Gold price have remained on a downward trend over the past week, with jewellery gold in Chennai falling by Rs 3,440 per sovereign. Buyers are closely watching whether the decline will continue as the new trading week begins.