சென்னை: தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. இருப்பினும், எத்தனை காலம் தங்கம் விலை சரியும் என்பது உறுதியாக தெரியவில்லை. இதன் காரணமாக நகைக்கடைகளுக்கு முற்றுகையிட்டுள்ள மக்கள், தங்கத்தை முன்பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் விலையை இப்போதே லாக் செய்து, தீபாவளி சமயத்தில் வாங்க மக்கள் திட்டமிட்டுள்ளனர்.
தங்கம் விலை நேற்று லேசாக உயர்ந்தாலும் கூட ஒட்டுமொத்தமாக அதன் விலை சரிவின் பாதையிலேயே இருக்கிறது. தங்கம் விலை இதேபோல எத்தனை காலம் சரியும் என்று தெரியாத நிலையில், தீபாவளிக்கு நகைகளை வாங்க நினைக்கும் மக்கள் இப்போதே அதை லாக் செய்து வருகிறார்களாம்.
நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இப்போது சரிந்துள்ள விலையை லாக் செய்ய நகை கடைகளில் மக்கள் குவிய ஆரம்பித்துள்ளனர். தங்கம் விலையில் ஏற்பட்ட சமீபத்திய சரிவை பயன்படுத்தி கொள்ளவும் திருமண சீசனுக்காக வாங்க இருப்போரும் முன்கூட்டியே நகைகளை முன்பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர். கடந்த சில மாதங்களாக நகை வாங்குவதில் மக்கள் எச்சரிக்கையுடன் இருந்த நிலையில், தற்போது வாடிக்கையாளர்களின் வருகையும் வாங்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளதாக நகைக்கடை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக பிரபல நகைக்கடை உரிமையாளர் சுவங்கர் சென் கூறுகையில், "கடந்த நான்கு மாதங்களாக மக்கள் பெரியளவில் நகைகளை வாங்கவில்லை. மக்கள் கடைகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. மக்கள் வருகை அதிகரித்து வருகிறது. பலரும் நகைகளை புக் செய்யவே வருகிறார்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது முன்பதிவுகள் கணிசமாக உயர்ந்துள்ளது. பண்டிகைக் காலத்தில் 20 சதவீதத்துக்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்" என்றார். கடந்தாண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடும்போது தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே, இந்தாண்டு கிராம் கணக்கில் தங்கம் விற்பனை லேசாக உயர்ந்தாலும் கூட மதிப்பு அடிப்படையில் விற்பனை அதிகளவில் இருக்கும் என அவர் குறிப்பிட்டார். தங்கம் விலை தொடர்ந்து மாறுவதால், வாடிக்கையாளர்களை ஈர்க்க நகைக்கடைகள் முன்பதிவு சலுகைகளை வழங்குகின்றன. முன்பணத்தை செலுத்தி அப்போதைய விலைக்கு தங்கத்தை லாக் செய்ய இந்த வசதி உதவுகிறது. பல முன்னணி நிறுவனங்களும் இதுபோன்ற முன்பதிவு திட்டங்களை வழங்குகின்றன. இருப்பினும், நிறுவனத்திற்கு நிறுவனம் விதிகள் மாறுபடும் என்பதால் பணத்தை போடும் முன்பு கவனமாக இருக்க வேண்டும்! அமெரிக்கா மத்திய வங்கி கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. நாளைய தினம் வட்டி விகிதம் தொடர்பான இறுதி முடிவை அமெரிக்க மத்திய வங்கி எடுக்கும். அதை பொறுத்தே தங்கம் விலை இருக்கும். எனவே, தற்போதைய சூழலில் தீபாவளிக்குள் தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்துவிடும் என உறுதியாக கூற முடியாது. தீபாவளியுடன் சேர்த்து கல்யாண சீசனும் வரும் சூழலில், தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது 22 கேரட் தங்கத்தில் antique டிசைன்கள் மற்றும் திருமண நகைகளுக்கும் தேவை அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதேபோல பழைய தங்கத்தை கொடுத்துவிட்டு, புதிய தங்கத்தை வாங்குவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களும் இதே டிரெண்ட் தான் தொடரும்.பண்டிகை சீசன்
வல்லுநர்கள் சொல்வது என்ன
புக் செய்யும் மக்கள்
கல்யாண சீசன்