Gold price: சட்டென சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.400 குறைந்தது.. சென்னையில் ஒரு சவரன் ரேட் என்ன?

  • சென்னை: தங்கம் விலை (Gold price) இன்று அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.1,17,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.295-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

    Advertisement

    தங்கம் விலை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. அடுத்த ஒரே ஆண்டில் ரூ.97 ஆயிரம் என்ற அளவுக்கு அதிரடியாக உயர்ந்தது. தற்போதும் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. பிப்ரவரி மாதத்தில் ஒரு சவரன் ரூ.1.25 ஆயிரத்தையும் தாண்டி விற்பனை ஆனது.

    Advertisement

    சட்டென சரிந்த தங்கம் விலை

    ஆனால் அதன்பிறகு தங்கம் விலை சரியத் தொடங்கியது. குறிப்பாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய சமயத்தில் தங்கம் விலை மீண்டும் குறையத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,10,480-க்கு விற்பனை ஆனது. அதன் பிறகு ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் ரூ.8 ஆயிரம் உயர்ந்தும் அதிர்ச்சி அளித்தது. சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,18,340-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,780-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சட்டென சரிந்துள்ளது.

    Advertisement

    இன்றைய ரேட் என்ன?

    இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. இதன்படி, சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் வெள்ளி விலை இன்று எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.295-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்து இருப்பது, நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

    23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
    22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
    21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480
    20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000

    Advertisement

    19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960
    18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000

    15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120
    14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400
    13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200
    12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640

    11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
    10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200

    07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
    05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
    04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000

    English Summary

    Gold price witnessed a sharp decline in Chennai today. The price of one sovereign of gold jewellery dropped by Rs.400 and is being sold at Rs.1,17,840, while one gram of gold fell by Rs.50 to Rs.14,730. Meanwhile, silver prices remained unchanged at Rs.295 per gram.