Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. மாலையில் ரூ.1,200 அதிகரித்தது.. நகை பிரியர்கள் அதிர்ச்சி

  • சென்னை: தங்கம் விலை (Gold Price) இன்று காலையில் குறைந்த நிலையில் மாலையில் அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.800 குறைந்து இருந்த நிலையில் மாலையில் ரூ.1,200 அதிகரித்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று ஒரு கிராம் ரூ.13,250-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொறுத்தவரை, சென்னையில் ஒரு கிராம் மாற்றமின்றி ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. இடையில் கொஞ்சம் விலை உயர்ந்தாலும் தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1.25 லட்சம் வரை விற்பனை ஆன நிலையில் தற்போது ஒரு சவரன் ரூ.1.04 லட்சம் என்ற அளவுக்கு குறைந்து இருக்கிறது. கிட்டத்தட்ட சவரனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேல் தங்கம் விலை குறைந்து இருப்பது நகை பிரியர்கள் இடையே நிம்மதியை கொடுத்துள்ளது.

    Advertisement

    சர்வதேச பொருளாதார சூழல், அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு இடையே மத்திய அரசு, கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது.

    தங்கம் விலை தொடர் சரிவு

    இதையடுத்தே தங்கம் விலையில் தொடர்ந்து சரிந்து வருவதாக பார்க்கப்படுகிறது. தங்களிடம் உள்ள பழைய தங்கத்தை மக்கள் விற்பனை செய்து வரும் காரணத்தால் தங்கம் விலை சரிவை நோக்கி செல்வதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,560 வரை குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை காலையில் கிராமுக்கு ரூ.270 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,030-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Advertisement

    இதேபோன்று நேற்று காலையில் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.2,160 குறைந்து ரூ.1,04,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை பிரியர்கள் குஷியடைந்தனர். இந்த நிலையில் மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. அதாவது நேற்று ஒரே நாளில் இரு முறை தங்கம் விலை மாறியது. காலையில் பெரிய அளவில் குறைந்த தங்கம் விலை மாலையில் சற்று உயர்ந்தது. அதன்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,200-க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.105,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    Advertisement

    இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

    இதனால் இன்றும் விலை அதிகரிக்குமோ என நகை பிரியர்கள் கவலை அடைந்தனர். ஆனால் இன்றும் தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.800 குறைந்து ரூ.1,04,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் இன்று காலையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாலையில் தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

    காலையில் சவரனுக்கு ரூ.800 குறைந்து இருந்த நிலையில் மாலையில் ரூ.1,200 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ரூ.13,250-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை இன்று மாலையில் அதிகரித்துள்ள நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரை இன்று எந்தவித மாற்றமும் இல்லை. சென்னையில் இன்று வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    English Summary

    Gold price have dropped sharply again today. In Chennai, the price of a sovereign of ornamental gold has decreased by Rs. 800, bringing the selling price to Rs. 1,04,800. The price per gram of ornamental gold has fallen by Rs. 100, selling at Rs. 13,100. Meanwhile, the price of silver in Chennai remains unchanged, selling at Rs. 240 per gram.