சென்னை: தங்கம் விலை (Gold Price) கடந்த 8 நாட்களாக குறைந்து வந்தது. திடீரென நேற்று தங்கம் விலை அதிகரித்து நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040 அதிகரித்தது. இதனால் இன்றும் நேற்றைப் போலவே ஷாக் கொடுக்குமோ நினைத்த நகைப் பிரியர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸை கொடுத்துள்ளது தங்கம் விலை.
இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.3,200 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.400 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதனால் நகை வாங்க பிளான் போட்டுள்ளவர்கள் இன்றே வாங்கிவிடலாம் என நினைத்துள்ளனர்.
தங்கம் விலை கடந்த ஒரு ஆண்டில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அதாவது ஜனவரி 1, 2025 அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.57,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த ஒரே ஆண்டில் இந்த விலை ஒரு லட்சத்தை தாண்டியது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சம் தொட்டு நகை பிரியர்கள், ஏழை எளியோருக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது இந்த தங்கம் விலை. இதற்கு பிறகாவது குறையும் என்று பார்த்தால் மேலும் தங்கம் விலை உயர்ந்தது. அடுத்த இரு மாதங்களில் மேலும் ரூ.20 ஆயிரம் உயர்ந்து தங்கம் விலை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது. தினம் தினம் உயரும் தங்கம் விலையை பார்த்து நகை பிரியர்கள் மற்றும் சாமானியர்கள் கவலையடைந்து வருகிறார்கள். கடந்த இரு மாதங்களாக மட்டுமே தங்கம் விலை பெரிய அளவில் உயராமல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் 4 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000 என்ற அளவில் இருந்தது. அதன்பிறகும் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்தது. கடந்த 30 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,17,040-க்கு விற்பனை ஆனது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. அதாவது கடந்த 8 நாட்களில் மட்டும் ரூ.4,440 குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீர் திருப்பமாக தங்கம் விலை அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்தது. சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,13,600 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.130 அதிகரித்து ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இன்று விலை குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,200 குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.3,200 குறைந்து ரூ.1,10,400- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.13,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென தங்கம் விலை தாறுமாறாக சரிந்துள்ளது நகை பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலையை போல வெள்ளி விலையும் குறைந்து வந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தங்கத்தை போல வெள்ளி விலையும் அதிரடியாக சரிந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.270க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இன்று வாங்கிவிடலாம் என பிளான் செய்துள்ளனர். 10.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400 06.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600 02.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000 28-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000 23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840 18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000 13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200 08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை
நேற்று ஷாக் கொடுத்த தங்கம் விலை
இன்று பெரிய அளவில் குறைந்தது
வெள்ளி விலையும் அதிரடி சரிவு
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
09.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
08.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560
07.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,440
04.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,840
03.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000
01-06-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
31-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
30-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
29-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
27-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
26-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480
20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960
17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120
14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400
12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640
11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000