தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்!

  • அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம், உலகளாவிய நிதிச் சந்தைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, முதலீட்டு சந்தை இயல்பு நிலைக்கு திரும்ப துவங்கியுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக டாலர் மதிப்பு உயர்வு காரணமாக தங்கம் விலை சரிந்தும், பங்குச்சந்தைகள் தடுமாறியும் வந்தது.

    Advertisement

    இந்த நிலையில் தற்போது போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ள காரணக்தால் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களில் சுமார் 300 டாலர் வரையில் சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது. தற்போது தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 4,355 டாலரை எட்டியுள்ளது. இது கடந்த ஒரு வாரத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

    Advertisement

    தங்க விலை 3 நாளில் $300 உயர்வு

    தங்கத்தின் விலை திங்கட்கிழமை 3.51 சதவீதம் உயர்ந்து, 4,355.66 டாலராக வர்த்தகமாகிறது. இந்த உயர்வு வியாழக்கிழமை 4,024 டாலர் அளவிலிருந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்கா - ஈரான் இடையே எட்டப்பட்ட போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தின் தாக்கங்கள் சந்தைக்கு சாதகமாக மாறும் காரணத்தால் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை மறுபரிசீலனை செய்து வரும் காரணத்தால் வியாழக்கிழமை முதல் தங்கம் விலை தொடர்ந்து மெல்ல மெல்ல உயர்ந்து இன்று 3 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

    அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தின் தாக்கம்

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஈரான் தரப்பும் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சந்தையில் முதலீட்டு உணர்வு மேம்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையின் பியூச்சர்ஸ் 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இதேபோல் டாவ் ஜோன்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து, நாஸ்டாக் 2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

    Advertisement

    கச்சா எண்ணெய் விலை சரிவு

    ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது. அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலை 5.44 சதவீதம் குறைந்து 80.26 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 4.97 சதவீதம் வீழ்ச்சியடைந்து 82.99 டாலராகவும் வர்த்தகமாகிறது. முர்பான் கச்சா எண்ணெய் 6.88 சதவீதம் சரிந்து 77.31 டாலராக உள்ளது.

    டாலர் மதிப்பு குறைவு தங்கத்துக்கு ஆதரவு

    அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது தங்கத்தின் விலை உயர்வுக்கு கூடுதல் ஆதரவாக அமைந்துள்ளது. டாலர் குறியீடு (DXY) 0.3 சதவீதம் குறைந்து 99.50 அளவில் உள்ளது. டாலரின் மதிப்பு குறையும்போது, பிற நாணயங்களைப் பயன்படுத்தி தங்கம் வாங்குவது மலிவாகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிக அளவில் வாங்கத் தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    இந்த அமைதி ஒப்பந்தம் எண்ணெய் சந்தையில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும், நீண்டகாலத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், உற்பத்தி மீட்சியின் வேகம் ஒவ்வொரு நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறனைப் பொறுத்து மாறுபடும்.

    English Summary

    Gold prices have jumped nearly $300 in just three days, hitting $4,355 per ounce, as investors react positively to the US-Iran peace framework agreement. The weakening US Dollar and expectations of normalized global energy flows are further supporting the rally in precious metals. அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் நேர்மறையான தாக்கத்தால் தங்கத்தின் விலை 3 நாட்களில் $300 உயர்ந்து $4,355ஐ எட்டியுள்ளது. டாலர் மதிப்பு குறைந்து வருவதும், உலகளாவிய எண்ணெய் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பும் தங்க விலை உயர்வுக்கு ஆதரவாக உள்ளன.