Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன?

  • சென்னை: தங்கம் விலை (Gold Price Today) நேற்றைப் போலவே இன்றும் தடாலடியாக சரிந்து நகைப்பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.5,600 குறைந்துள்ளது. கடந்த 8 நாட்கள் என எடுத்துக்கொண்டால் சவரனுக்கு ரூ.8,000 குறைந்துள்ளது. இது நகை பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தங்க நகை வாங்க பிளான் செய்துள்ளவர்கள் இன்றே வாங்க முடிவு செய்துள்ளனர்.

    Advertisement

    கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன் தினம் விலை உயர்ந்தாலும், அதை விட இருமடங்கு நேற்று சரிந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,200 குறைந்தது. இன்றும் விலை குறையுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது.

    Advertisement

    தங்கம் விலை சரிவு

    நம் நாட்டில் தங்கம் இந்தியர்களின் பாரம்பரிய முதலீடாகவும், பெண்களின் விருப்பமான ஆபரணமாகவும் நீண்ட காலமாக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. திருமணம், விழாக்கள், சேமிப்பு மற்றும் முதலீடு என பல்வேறு தேவைகளுக்காக தங்கம் வாங்கும் பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக சர்வதேச பொருளாதார சூழல், டாலர் மதிப்பு, மத்திய வங்கிகளின் கொள்கைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் போன்ற காரணிகளால் தங்கத்தின் விலை தினமும் மாற்றம் கண்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற ஆரம்பித்த தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தான் விலை சற்று குறைய ஆரம்பித்து இருக்கிறது.

    Advertisement

    சிறிது நாட்களாக தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், நகை வாங்குபவர்களும் முதலீட்டாளர்களும் சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கடந்த மாதம் (மே) 4 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000 என்ற அளவில் இருந்தது. அதன்பிறகு மீண்டும் ஏறியது. கடந்த 30 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,17,040-க்கு விற்பனை ஆனது. இதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் விலை சரிந்து வருகிறது.

    ஒரே நாளில் ரூ.2,400 சரிவு

    தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை நேற்று முன் தினம் திடீரென அதிகரித்தது. இதனால் மீண்டும் தங்கம் விலை உயருமோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று திடீர் திருப்பமாக தங்கம் விலை தாறுமாறாக சரிந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,200 குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.3,200 குறைந்து ரூ.1,10,400- க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.13,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Advertisement

    திடீரென தங்கம் விலை தாறுமாறாக சரிந்துள்ளது நகை பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. இன்று விலை குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் இன்றும் நேற்றைப் போலவே அதிரடியாக தங்கம் விலை சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.2,400 குறைந்து ரூ.1,08,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.300 குறைந்து ரூ.13,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.5,600 குறைந்துள்ளது. கடந்த 8 நாட்களில் சவரனுக்கு ரூ.8,000 குறைந்துள்ளது.

    Advertisement

    வெள்ளி விலை என்ன?

    தங்கம் விலையை போல வெள்ளி விலையும் குறைந்து வந்தது. நேற்று வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இன்றே கடைக்கு போய் வாங்கிவிடலாம் என பிளான் செய்துள்ளனர்.

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

    11.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,000
    10.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400
    09.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
    08.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560
    07.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600

    Advertisement

    06.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
    05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,440
    04.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,840
    03.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000

    02.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000
    01-06-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
    31-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
    30-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
    29-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

    28-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
    27-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
    26-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
    25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
    24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840

    23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
    22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
    21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480
    20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960

    18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120
    14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400

    13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200
    12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640
    11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
    10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200

    08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
    05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
    04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000

    English Summary

    Gold Rate Today: Gold prices continued their sharp decline, bringing relief to jewellery buyers. The price has fallen by ₹5,600 in the last two days and by ₹8,000 over the past 8 days, encouraging consumers planning to purchase gold ornaments.