Gold Price Today: தங்கம் விலை மளமளவென சரிந்தது.. 2வது நாளாக இன்றும் குறைந்தது.. நகை பிரியர்கள் குஷி!

  • சென்னை: தங்கம் விலை (Gold Price Today) தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.240 குறைந்து ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த இரு நாட்களாக குறைந்து வருவது நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

    Advertisement

    தங்கம் விலை கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து உச்சம் தொட ஆரம்பித்தது. நடப்பு ஆண்டு தொடங்கிய பிறகும் தங்கம் விலை நிற்கவில்லை. தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தது. தினம் தினம் புது உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை பிப்ரவரி மாதத்தில் இருந்து சற்று குறைய ஆரம்பித்தது. தொடர்ந்து அமெரிக்கா ஈரான் போருக்கு பிறகு மேலும் குறையத் தொடங்கியது.

    Advertisement

    மீண்டும் சரிந்த தங்கம் விலை

    கடந்த மே மாதம் 4 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000 என்ற அளவிற்கு குறைந்தது. அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை ஏறியது. இருந்தாலும் பெரிய அளவில் உயராமல், புது உச்சம் தொடாமல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த வாரத் தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. 8 நாட்களில் சவரனுக்கு ரூ.8 ஆயிரம் வரை சரிந்தது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது.

    Advertisement

    இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. நேற்று மட்டும் சென்னையில் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.14,060-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.

    இன்றைய தங்கம், வெள்ளி விலை

    தங்கம் விலை இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.240 குறைந்து ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த இரு நாட்களாக குறைந்து வருவது நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

    Advertisement

    தங்கம் விலையை போன்று நேற்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.275-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

    17.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,240
    16.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480
    15.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560
    14.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880
    13.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880
    12.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400

    Advertisement

    11.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,000
    10.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400
    09.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
    08.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560
    07.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600

    06.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
    05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,440
    04.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,840
    03.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000

    02.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000
    01-06-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
    31-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
    30-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
    29-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

    Advertisement

    28-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
    27-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
    26-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
    25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
    24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840

    23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
    22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
    21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480
    20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960

    18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
    15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120
    14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400

    13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200
    12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640
    11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
    10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200

    08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
    06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
    05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
    04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000

    English Summary

    Gold Price Today: Gold prices in Chennai declined for the second straight day. An eight-gram sovereign dropped by Rs.240 to Rs.1,12,240, while one gram fell by Rs.30 to Rs.14,030. Silver prices remained unchanged at Rs.275 per gram, bringing relief to jewellery buyers.