Gold Rate Today: மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று என்ன ரேட்?

  • சென்னை: தங்கம் விலை நேற்று காலையில் ரூ.1,920 அதிரடியாக சரிந்து, மீண்டும் மாலையில் ரூ.1,120 உயர்ந்தது. இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170க்கு விற்பனையாகிறது.

    Advertisement

    சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய போர் உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

    Advertisement

    தங்கம் விலை

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. செப்டம்பர் 9ஆம் தேதி, தங்கம் விலை கிராமுக்கு, 125 ரூபாய் குறைந்து, 14,145 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,000 ரூபாய் சரிந்து, 1,13,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று முன்தினம் (செப்டம்பர் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து 14,255 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இன்று அதிரடி சரிவு

    நேற்று காலையில் தங்கம் அதிரடியாக குறைந்தது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015க்கும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120க்கும் விற்பனை செய்யப்ட்டது. ஆனால், மாலையில், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூபாய் 1,120 உயர்ந்து ரூ.1,13,240க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Advertisement

    இந்நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,13,360க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.15 விலை உயர்ந்து ரூ.14,170க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.10 குறைந்த நிலையில் மாலையில் ரூ.5 உயர்ந்தது. ஒட்டுமொத்தமாக நேற்று மட்டும் 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.250-க்கு விற்பனையானது. இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

    12.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,360 (இன்று)
    11.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,240 (நேற்று மாலை)
    11.09.2026 - ஒரு சவரன் ரூ.1,12,120 (நேற்று காலை)

    10.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,040
    9.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,160
    8.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160
    7.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,040
    6.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520

    5.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520
    4.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,880
    3.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,920
    2.09.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600

    Advertisement

    1.09.2026 - ஒரு சவரன் ரூ.1,15,080
    31.08.2026 - ஒரு சவரன் ரூ.1,14,960
    30.08.2026 - ஒரு சவரன் ரூ.1,16,040
    29.08.2026 - ஒரு சவரன் ரூ.1,16,040

    28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,18,400 (மாலை)
    28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,17,200 (காலை)
    26.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,19,520
    25.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,17,800
    24.08.2026 - ஒரு சவரன் ரூ.1,20,240

    23.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
    22.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
    21.08.2026 - ஒரு சவரன் ரூ.1,18,800
    20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800

    17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160
    16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600

    Advertisement

    13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
    12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
    11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
    10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600

    9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
    7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
    5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840

    4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
    3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
    2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
    1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760

    English Summary

    The price of gold dropped sharply yesterday morning but rose again in the evening. Against this backdrop, the price of ornamental gold in Chennai has increased by ₹120 per sovereign today, bringing the selling price to ₹1,13,360.