Gold Price Today: படுத்தேவிட்ட தங்கம் விலை.. சவரன் 1 லட்சத்துக்கு கீழ் சரிகிறது..வார முதல் நாளே காத்திருக்கும் சர்ப்ரைஸ்

  • சென்னை: தங்கம் விலை (Gold Price Today) படுத்தேவிட்டதய்யா என்று சொல்கிற அளவுக்கு தாறுமாறாக சரிந்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 சரிந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே மிகப்பெரிய அளவில் மீண்டும் தங்கம் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்ல வாய்ப்புள்ளதாம்.

    Advertisement

    தங்கம் விலை கடந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி (1.1.2025) ஒரு சவரன் ரூ.57,200-க்கு விற்பனை ஆனது. அந்த மாத இறுதியிலேயே அதாவது ஜனவரி 31 ஆம் தேதி (31.01.2025) ஒரு சவரன் ரூ.61,840 ஆக உயர்ந்தது.

    Advertisement


    ஒரு சவரன் ரூ.1.34 லட்சம்

    அடுத்தடுத்த நாட்களிலும் தினம் தினம் புது உச்சம் தொட்ட தங்கம் விலை நகை பிரியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்போது குறையும், பிறகு குறையும் என எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியது. ஒரே ஆண்டுக்குள் அதாவது நடப்பு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்துக்கு வந்தது. நாளுக்கு நாள் அதிகரித்த தங்கம் விலை ரூ.1 லட்சத்தையும் தாண்டி நகை பிரியர்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியது.

    அதோடு நிற்காத தங்கம் விலை மீண்டும் மளமளவென உயர்ந்து அதே மாதம் 29 ஆம் தேதி வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சபட்சமாக ரூ.1.34 லட்சத்தை தொட்டது. இதனால் கலங்கிப் போன நகைபிரியர்கள் இனி தங்கத்தை கனவில் தான் வாங்க முடியும் என அச்சமடைந்தனர். ஆனால் அதன்பிறகு தங்கம் விலை இறங்குமுகத்தை சந்தித்தது.

    Advertisement

    தொடர்ந்து சரிந்த தங்கம் விலை

    தொடர்ச்சியாக ஈரான் அமெரிக்கா போர் தொடங்கவே அப்படியே தங்கம் விலை சரியத் தொடங்கியது. இடையிடையே அதிகரித்தாலும் தங்கம் விலை பெரிய அளவில் மீண்டும் உச்சம் தொடாமல் இருந்தது. அதாவது ரூ.1.34 லட்சம் என்ற இலக்கை தாண்டவில்லை. கடந்த 8 மாதங்களாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்த தங்கம் விலை கடந்த மாதம் அதிரடியாக சரிய ஆரம்பித்தது.

    குறிப்பாக கடந்த மாத இறுதியில் தங்கம் விலை தாறுமாறாக சரிந்து ரூ.1,01,840 என்ற அளவுக்கு குறைந்தது. நேற்று முன் தினம் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.310 குறைந்து ரூ.12,730-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Advertisement

    ஒரு லட்சத்திற்கு கீழ் போகுமா?

    நேற்று மாதத்தின் தொடக்க நாள் விடுமுறை என்பதால் எந்த வித மாற்றமும் இல்லை. இந்நிலையில் தான் இன்றும் பெரிய அளவில் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.2 ஆயிரம் அளவில் குறைந்தால் ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சென்றுவிடும்.

    வெள்ளி விலையும் இமாலய சரிவு

    தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் நடப்பு ஜனவரி 29 ஆம் தேதி வரலாற்றில் இல்லாத உச்சபட்சமாக ஒரு கிராம் ரூ.425-க்கு விற்பனை ஆனது. ஆனால் அதன்பிறகு தொடர்ச்சியாக சரிந்து வந்த வெள்ளி விலை ரூ.280 என்ற அளவில் நீடித்து வந்தது. தற்போது அதைவிடவும் சரிந்துள்ளது. நேற்று சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

    1-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840 (நேற்று)
    31-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840
    30-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,320
    29-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560
    28-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560

    27-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,080
    26-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,680
    25-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
    24-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
    23-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,480

    Advertisement

    22-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,880
    21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,120
    20-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,920
    19-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,560

    18-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
    17-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
    16-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
    15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
    14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,720

    12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,760
    12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,720
    11-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
    10-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
    08-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860
    07-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860

    06-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,280
    05-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
    04-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
    03-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400

    02-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,200
    01-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320
    30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,680
    29-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,120

    28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320 (மாலை)
    28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,120 (காலை)
    27-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
    26-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000

    25-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,080
    24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
    23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,080
    21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,480

    20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
    19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
    18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.113,240
    17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.112,080

    1.09.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,15,080
    1.08.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,760.

    English Summary

    Gold Price Today: The price of gold is plummeting so drastically that one might say it has truly collapsed. Following a sharp decline of Rs. 2,480 per sovereign in a single day the day before yesterday, it is expected that gold prices will see another massive drop today—the first day of the week. Consequently, there is a possibility that the price of gold could fall back below the Rs. 1 lakh mark.