Gold Price Today: ஒரு லட்சத்தை தொட்டு நிற்கும் தங்கம் விலை.. இன்று கூடுமா? குறையுமா? நகை பிரியர்கள் எதிர்பார்ப்பு

  • சென்னை: தங்கம் விலை (Gold Price Today) தாறுமாறாக சரிந்து வந்த நிலையில் திடீரென கடந்த இரு நாட்களாக உயர்ந்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளதால் நகை பிரியர்கள் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் இன்றாவது விலை குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர். எனினும் இன்று தங்கம் விலை குறையும் என்றே தெரிகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 33.62 டாலர் குறைந்து உள்ளது. எனவே நம் ஊர் சந்தையிலும் இது எதிரொலிக்கும் என்பதால் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    Advertisement

    தங்கம் விலை எப்போது தான் குறையும் என எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே தாறுமாறாக சரிந்துள்ளது. கடந்த ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் ரூ.1.34 லட்சம் என்ற வரலாற்றில் இல்லாத உச்சம் தொட்ட நிலையில், தற்போது ரூ.1.02 லட்சத்திற்கு குறைந்துவிட்டது. அதாவது கடந்த 10 மாதங்களில் சவரனுக்கு ரூ.32 ஆயிரம் குறைந்து விட்டது.

    Advertisement

    குறிப்பாக கடந்த மூன்று மாதங்களாகவே தங்கம் விலை பெரியளவில் உயராமல் ரூ.1.10 லட்சம் என்ற அளவில் நீடித்து வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,760-க்கு விற்பனை ஆனது. அடுத்த மாதம் சற்று உயர்ந்து ரூ.1,15,080-க்கு விற்பனை ஆனது. மீண்டும் குறைந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் ரூ.1,09,320-க்கு விற்பனை ஆனது. இது மேலும் குறைந்து நேற்று முன் தினம் ரூ.1,01,840-க்கு விற்பனை ஆனது.

    இன்று தங்கம் விலை கூடுமா?

    தாறுமாறாக சரிந்து வரும் தங்கம் விலையால் நகை பிரியர்களும் குஷியடைந்தனர். எனினும் தங்கம் விலை ஒரு லட்சத்திற்கு கீழ் சென்றுவிடுமா என எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று முன் தினம் திடீரென தங்கம் விலை அதிகரித்தது. வாரத்தின் முதல் நாளே சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.1,02,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Advertisement

    நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து இருப்பது நகை பிரியர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்றாவது மீண்டும் தங்கம் விலை குறைந்து இன்ப அதிர்ச்சி தருமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர். சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் 33.62 டாலர் குறைந்து உள்ளது. எனவே நம் ஊர் சந்தையிலும் இது எதிரொலிக்கும் என்பதால் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    Advertisement

    வெள்ளி விலை என்ன?

    தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் தாறுமாறாக சரிந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கிராம் ரூ.425-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரு கிராம் ரூ.200க்கு விற்பனை ஆனது. இன்று விலை குறையுமா இல்லை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

    3-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,400 (நேற்று)
    2-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,200
    1-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840
    31-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840
    30-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,320
    29-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560
    28-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560

    Advertisement

    27-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,080
    26-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,680
    25-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
    24-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
    23-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,480

    22-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,880
    21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,120
    20-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,920
    19-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,560

    18-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
    17-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
    16-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
    15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
    14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,720

    Advertisement

    12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,760
    12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,720
    11-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
    10-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
    08-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860
    07-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860

    06-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,280
    05-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
    04-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
    03-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400

    02-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,200
    01-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320
    30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,680
    29-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,120

    28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320 (மாலை)
    28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,120 (காலை)
    27-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
    26-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000

    25-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,080
    24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
    23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,080
    21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,480

    20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
    19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
    18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.113,240
    17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.112,080

    1.09.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,15,080
    1.08.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,760.

    English Summary

    Gold Price Today: After experiencing a sharp decline, the price of gold has suddenly begun to rise over the past two days. With an increase of Rs. 560 per sovereign in just this short period, jewelry enthusiasts have been somewhat taken aback. Consequently, they are now hoping that the price might decrease today.