Gold Price Today: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்தது! ஒரு சவரன் ரேட் என்ன?

  • சென்னை: தங்கம் விலை (Gold Price Today) கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சரிந்து வந்தது. நேற்றும் சவரனுக்கு ரூ.120 குறைந்து இருந்தது. ஆனால் இன்று திடீரென தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்து நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வெள்ளி விலை இன்றும் எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் சென்னையில் ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    தங்கம் விலை கடந்த 8 மாதங்களாகவே சரிந்து வருகிறது. மார்ச் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.1.30 லட்சத்தை தாண்டி விற்பனை ஆன நிலையில் அதற்கு பிறகு புது உச்சம் தொடமால இருந்து வருகிறது.

    Advertisement


    தங்கம் விலை குறைந்தது

    கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் சென்னையில் ரூ.1,05,760-க்கு விற்பனை ஆனது. அதன் பிறகு கிடுகிடுவென உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் ரூ.1.20 லட்சம் என்ற அளவுக்கு உயர்ந்தது. இதனால் மீண்டும் தங்கம் விலை புது உச்சத்தை தொட்டு விடுமோ என நகை பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் சரிய தொடங்கியது.

    கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,15,080-க்கு விற்பனை ஆனது. எனினும் பெரிய அளவில் உயராமலும் சரியாமலும் இருந்தது. இந்த மாதம் 1 ஆம் தேதி ரூ.1,09,320 என்று விற்பனை ஆனது. அதன் பிறகு கடந்த ஒரு வாரமாகவே இதே விலையில் சிறிது உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. நேற்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.120 குறைந்து இருந்தது.

    Advertisement

    இன்று தங்கம் விலை உயர்ந்தது

    சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,09,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.15 குறைந்து ரூ13.660-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை இன்று திடீரென கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்து நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.400 உயர்ந்து ரூ.1,09,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.13,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்றும் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை

    07-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860 (இன்று)
    06-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,280
    05-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
    04-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
    03-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400

    02-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,200
    01-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320
    30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,680
    29-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,120

    Advertisement

    28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320 (மாலை)
    28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,120 (காலை)
    27-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
    26-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000

    25-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,080
    24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
    23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,080
    21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,480

    20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
    19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
    18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.113,240
    17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.112,080

    Advertisement

    1.09.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,15,080
    1.08.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,760.

    English Summary

    Gold Price Today: The price of gold continues to fall. After dropping by Rs. 800 per sovereign the day before yesterday, the price has decreased again today. Today alone, the price of gold has dropped by Rs. 120 per sovereign. Meanwhile, the price of silver remains unchanged, selling at Rs. 245 per gram in Chennai.