சென்னை: தங்கம் விலை நேற்று அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை சவரனுக்கு சுமார் 8 ஆயிரம் என்ற அளவில் சரிந்து இருப்பது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
நாள்தோறும் ட்விஸ்ட் கொடுத்து வந்த தங்கம் விலை தற்போது பெரிய அளவில் குறைந்துள்ளது. கடந்த மாதம் ஒரு சவரன் ரூ.1.20 லட்சம் என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது 1.12 லட்சம் என்ற அளவுக்கு சரிந்துள்ளது நகை பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சவரன் ரூ.57 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. கடந்த ஜனவரியில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டது. தொடர்ந்து பிப்ரவரியில் 1.30 லட்சம் என்ற இமாலய வரலாற்றில் இல்லாத அளவு உச்சம் தொட்டது. ஆனால் அதற்கு பிறகு தங்கம் குறைய ஆரம்பித்தது. சொல்லப்போனால், கடந்த 8 மாதங்களாக பெரிய அளவில் தங்கம் விலை உயராமல் சரிந்துகொண்டே வந்தது. இதனால் கடந்த ஆகஸ்டு 1 ஆம் தேதி தங்கம் விலை ரூ.1,05,760 என்ற அளவுக்கு சரிந்து நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் மீண்டும் தங்கம் விலை வீழ்ச்சியை நோக்கி செல்லுமோ என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு மீண்டும் சட்டென தங்கம் விலை உயரத் தொடங்கியது. கடந்த 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,13,400-க்கு விற்பனை ஆனது. தொடர்ந்து ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து இருந்தது. சவரனுக்கு ரூ.1,12,080-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.14,010-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.1,12,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,000-க்கும் விற்பனை ஆகின்றது. சென்னையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,20,240 என விற்பனை ஆன நிலையில் ஒரு மாதத்தில் ரூ.8 ஆயிரம் என்ற அளவுக்கு தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன. தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் சரிந்து வருகிறது. நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கு விற்பனை ஆனது. இன்று வெள்ளி விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் விற்பனை ஆகின்றது. 26-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000 (இன்று) 21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,13,480தங்கம் விலை
இன்றைய ரேட் என்ன?
Gold Rate Today: மீண்டும் சரிவை நோக்கி தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.440 குறைந்தது!
8 ஆயிரம் சரிந்த தங்கம் விலை
Gold Rate Today: தங்கம் விலை ஒரே நாளில் கடுமையான சரிவு.. ரூ.1,920 குறைந்தது.. நகைப் பிரியர்கள் குஷி!
கடந்த சில நாட்களில் தங்கம் விலை
25-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,080
24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,12,000
23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.1,13,080
20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.114,280
19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.114,280
18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.113,240
17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம்- ரூ.112,080